"சனாதனம்".. தொல் திருமாவளவனுடன் கைகோர்க்கிறாரா பா ரஞ்சித்? பரபரக்கும் "சிறுத்தைகள்".. உண்மை என்ன?
சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் வருங்காலத்தில் அரசியலுக்கு வருவதென்றால் அவரது தேர்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவுக்கு வந்த குறைந்த காலத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பா ரஞ்சித். இவர் சாதி கொடுமைகளை எதிராக படங்களை எடுத்துள்ளதால் இவருக்கென விளிம்பு நிலையில் உள்ளவர்கள் ரசிகர்களாக உள்ளனர்.
சமூக உணர்வுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் மூலம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

யூடியூப் சேனல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பா ரஞ்சித், வரும் காலத்தில் அரசியல்வாதியாக இருக்கலாம். ஆனால் எனக்கு எதிர்காலத்தில் நடப்பது குறித்து இப்போதே சொல்ல முடியவில்லை. இந்தியாவில் பல தலித் அமைப்புகள் இருந்தாலும் விசிகதான் மிக முக்கியமான கட்சியாக உள்ளது.

சனாதன எதிர்ப்பு
எத்தனையோ ஆண்டுகள் ஆனநிலையிலும் இன்னும் சனாதன எதிர்ப்பை விடுதலைச சிறுத்தைகள் கட்சி முன்னிறுத்தி வருகிறது. மதவாதம், சனாதனத்தை எதிர்க்கக் கூடிய தலைவராக திருமாவளவ் கர்ஜித்து கொண்டிருக்கிறார் என பா ரஞ்சித், திருமாவை வெளிப்படையாகவே பாராட்டியிருந்தார்.

அரசியலுக்கு வருவீர்களா
அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு வருவேன், வரமாட்டேன் என்ற கருத்துகளை சொல்லாமல் நடுநிலையாக ஒரு கருத்தை பா ரஞ்சித் கூறியுள்ளார். எனவே அவர் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பா ரஞ்சித் இணைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள்
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாவலனிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் கேட்ட போது, இப்போதைக்கு பா ரஞ்சித் அரசியலுக்கு வருகிறாரா என்பது தெரியவில்லை. தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் அதை உறுதியாக சொல்லவில்லை. பா ரஞ்சித் விசிக தலைவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்டிருக்கிறார். அதோடு அம்பேத்காரிஸ்ட்.

சமூக செயற்பாட்டாளர்
தயாரிப்பாளர், இயக்குநர், சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட அவதாரங்களை எடுத்துள்ள பா ரஞ்சித் அரசியலுக்கும் வர வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. எங்கள் தலைவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசுபவர். எங்கள் தலைவரை போல் ரஞ்சித்தும் ஒத்த எண்ணத்தை வைத்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள்தான்
ஆவடியை சேர்ந்த அவர் அங்குள்ள சில தலித் அமைப்புகளுடன் இணைந்து சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக போராடி வருகிறார். ஒரு வேளை பா ரஞ்சித் அரசியலுக்கு வருவதால் இருந்தால் அவரது தேர்வு நிச்சயம் விடுதலைச் சிறுத்தைகளாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் பாவலன்.
-
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
தவெகவுக்கு தாவிய.. அதிமுக எம்எல்ஏக்களின் செயல் அர்த்தமற்றது! - கொந்தளித்த விசிகவின் பாலாஜி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications