விஜய்சேதுபதியை மக்கள் செல்வனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு-ராதிகா, குஷ்புவுக்கும் பதிலடி
சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு இயக்குநர் சீனுராமசாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதியின் திரைவாழ்வில் மிக முக்கியமான பங்களிப்பு செய்தவர் இயக்குநர் சீனுராமசாமி. இவர்தான் விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற மகத்தான பட்டத்தை வழங்கினார்.

இயக்குநர் சீனுராமசாமி
தற்போது இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்ற விவகாரத்தில் தமது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நடிகைகள் ராதிகா, குஷ்பு ஆகியோருக்கும் சீனுராமசாமி பதிலளித்துள்ளார்.

முரண்பாடுகள் தேசம்
முதல் ட்விட்டர் பதிவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மீது மக்களும் தலைவர்களும் கலைஞர்களும் வைத்திருக்கும் பாசம். அவர்களது வேண்டுகோளில் தெரிகிறது. அனைவருக்கும் நன்றி தன் கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் முழு உரிமை நடிகருக்கு உண்டு ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது, இம்ரான்கானாக ஷாருக்கான் ஜீ நடிக்க முடியுமா? அவ்வளவுதான் #முத்தையாமுரளிதரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராதிகாவுக்கு பதில்
அடுத்த ட்விட்டர் பதிவில் நடிகை ராதிகாவுக்கு பதில் அளித்துள்ளார். ஐபிஎல் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருப்பதை பற்றி கேள்வி கேட்கவில்லையே என்பதுதான் ராதிகாவின் கேள்வி. இதற்கு சீனுராமசாமி அளித்திருக்கும் ட்வீட் பதில்: ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐ பி எல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா? இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டை தீர்க்குமா? என் மரியாதைக்குறிய சகோதரி. @realradikaa என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு
பாஜக நடிகை குஷ்புவுக்கு இயக்குநர் சீனுராமசாமியின் பதில்: @khushsundar சகோதரி வணக்கம் முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க இப்ப நடிக்க முடியுமா? சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற சமூக பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications