நெஞ்சம் உடைந்து சிதறியது.. கண்ணீர் விட்ட செல்வராகவன்.. உலக கோப்பை தோல்வி குறித்து உருக்கம்!
சென்னை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தொடர் முழுவதும் அட்டகாசமாக ஆடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று ரசிகர்களின் இதயங்களை உடைத்தது. 2003க்குப் பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஏக்கத்தை இந்தியா தீர்க்கும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்த்திருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் பலரும் தங்கள் ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், பல திரை பிரபலங்களும் இந்திய அணி தோல்வியடைந்ததை பற்றி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தோல்வியால் அழுததாக இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" எனத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications