Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒளி ஏற்றியவர்.. ராமதாஸை முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியிருக்க கூடாது! வாய்ஸ் கொடுத்த தங்கர் பச்சான்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதானி விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை குறித்த கேள்விக்கு அவருக்கு வேறு வேலை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசி இருக்கக் கூடாது என கூறியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான்.

சென்னை எழில் நகரில் மக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர்.

Thankar Bachan mk stalin Ramadoss

அப்போது, அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அளித்த தமிழக முதலமைச்சர், "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் முதல்வரின் பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்," பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசி இருக்கக் கூடாது." என கூறியுள்ளார் இயக்குனர் தங்கர் பச்சான். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐயா மருத்துவர் ராமதாசு அவர்கள் மீது வெறுப்பை உணர்ந்திருக்கிறார். ஐயா அவர்கள் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இம்மக்கள் இந்த மண் மொழி இனம் குறித்து மட்டுமே சிந்தித்து செயலாற்றி வருபவர்!

அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள் அனைத்துமே உடனடி தீர்க்கப்பட வேண்டிய செயல்படுத்த வேண்டிய சமூகத்தின் தேவை என்பது அதனை படித்தவர்களுக்கு புரியும். மருத்துவர் ஐயா அவர்கள் வேலையில்லாமல் அறிக்கைகள் வெளியிடவில்லை. வேலை தெரியாதவர்கள் செயல்படுவதற்காக வெளியிடுகிறார்! இதுவரை எந்த ஒரு அரசியல் பதவியையும் அனுபவிக்காமல் தனி மனிதனாக இருந்து 6 இட ஒதுக்கீடுகளை இந்திய சமுதாயத்திற்கு பெற்றுத் தந்தவர்!

அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருபவர் அல்ல! அம்பேத்கரின் கொள்கைப்படி இட ஒதுக்கீடு கொள்கைகளை பின்பற்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்! முதலமைச்சர் அவர்கள் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசி இருக்கக் கூடாது." என கூறியுள்ளார்.

இதற்கிடையே, மருத்துவர் ராமதாஸை மரியாதை குறைவாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ஒரு முதலமைச்சர் இவ்வாறு பேசுவது அவர் வகுத்து வரும் பதவிக்கு அழகு அல்ல என பாமக தலைவரும், பாமக நிறுவனர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+