பிரசாந்த் அப்பா பெரிய மனுஷன்யா.. மலையூர் நாட்டாமை பாட்டுக்கு காப்பிரைட்? தியாகராஜன் சொன்ன வார்த்தை!
சென்னை: சசிகுமார் சிம்ரன் நடிப்பில் வெளியாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மலையூர் நாட்டாமை பாடலுக்கு காபி ரைட்ஸ் கேட்க மாட்டேன் எனவும், எனது பாடலை பயன்படுத்தியதற்காக அவர்களுக்குத்தான் நான் பணம் தர வேண்டும் என கூறி இருக்கிறார் பிரபல இயக்குனரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன்.
நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர், இயக்குனர் சசிகுமார். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி, கருடன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. குறிப்பாக, முதன்முறையாக சிம்ரனுடன் அவர் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டி இருக்கிறது. இந்த வருடத்தின் வெற்றி பெற்ற மிகச் சில படங்களில் அந்த படமும் ஒன்று. இதனை தொடர்ந்து இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட பட குழுவினரை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் அந்தப் படத்தில் காமெடி காட்சிகளும் நன்றாக கை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். மேலும் தியேட்டரில் வெளியான போதும் தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கும்போது தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் அந்த படத்தில் 'மலையூர் நாட்டாமை' பாடல் இடம் பெற்றிருந்தது அது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். இது தொடர்பாக யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய அவர், முதலில் எனக்கு மிக சந்தோசம். அந்த இயக்குனருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்று இருந்த அந்த பாடல் தற்போது இரண்டு மூன்று படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் கூட ஒரு படத்தில் இடம்பெற்று இருப்பதாக கேள்விப்பட்டேன்.
தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் அந்த பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக நான் காப்பிரைட்ஸ் கேட்கவில்லை. கேட்கப் போவதுமில்லை. ஒரு தயாரிப்பாளராக அந்த பாடலை நான் தயாரித்து வெளியிட்டு அது வெற்றி அடைந்து விட்டது. மீண்டும் எனக்கு பணம் வேண்டும் என கேட்பது நியாயம் இல்லை. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த பாடலை தற்போது அந்த படத்தின் மூலம் பிரபலமாக்கி இருக்கிறார்கள். அதற்கு நான் தான் அவர்களுக்கு பணம் தர வேண்டும்.
காப்பிரைட்ஸ் கேளுங்கள் என சிலர் என்னிடம் கேட்டார்கள். ஆனால் முடியவே முடியாது என ஒரே வார்த்தையில் நான் பதில் சொல்லிவிட்டேன். இந்த பாடல் மட்டும் அல்ல. இதுவரை நான் எடுத்த படங்களில் எந்த பாடலை யார் பயன்படுத்தினாலும் நான் காப்பிரைட்ஸ் கேட்க மாட்டேன்" என கூறி இருக்கிறார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications