புத்தர் சிலையை திருடினாரா திருமங்கை ஆழ்வார்.. ஸ்ரீரங்கம் மதில் சுவர் பற்றிய ஆன்மீக பேச்சால் சர்ச்சை
சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் சுற்று சுவர் கட்டப்பட்டது தொடர்பாக ஆன்மிக பேச்சாளர் அரவிந்தலோசனன் சமீபத்தில் பேசிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சுமார் 2500 முதல் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படும் ஸ்ரீரங்கநாதர் கோயில் தென்னிந்தியாவின் அடையாளங்களில் முதன்மையானதாக இருக்கிறது. இது 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோயிலின் சுற்று சுவர் கட்டப்பட்ட வரலாறு குறித்த சில தகவல்கள் வெளியாகி விவாதங்களை கிளப்பியுள்ளன.

இந்த விவாதங்களுக்கு காரணம் ஆன்மிக பேச்சாளர் அரவிந்தலோசனன் சமீபத்தில் பேசிய விஷயங்கள்தான். இவர் 'ஆழ்வார்கள் வைபவம்' எனும் தலைப்பில் ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆன்மிக உரையை சமீபத்தில் நடத்தியிருந்தார். அதில் திருமங்கை ஆழ்வார் குறித்து பேசிய சில விஷயங்கள்தான் சலசலப்புகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. சொற்பொழிவின் போது அவர் பேசியதாவது,
"திருமங்கை மன்னன் ரங்கநாதன் கோயிலுக்கு மதில் சுற்று கட்ட வேண்டும் என்று விருப்பப்படுகிறார். ஆனால் அவரிடத்தில் பணம் இல்லை. அப்போதுதான் ஒருவர் நாகப்பட்டினத்தில் புத்த விக்ரகம் இருக்கிறது, அது முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. எனவே அதை கொண்டு வந்து இந்த சுற்றுச்சுவரை கட்டலாம் என்று கூறியுள்ளார். திருமங்கை ஆழ்வார் அந்த புத்தர் சிலையை கொள்ளையடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.
ஆனால் புத்தர் சிலைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. எனவே நாகப்பட்டினம் புத்தர் கோயிலை கட்டியவரை தேடி கண்டுபிடித்து அவரிடமிருந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி எப்படி புத்தர் சிலையை எடுப்பது என்பது குறித்த விவரங்களை சூசமாக தெரிந்து கொண்டார் திருமங்கை ஆழ்வார். பின்னர் அந்த கோயிலிருந்து புத்தர் சிலையை எடுத்து உருக்கி காசாக்கி அதை கொண்டு மதில் சுவரை கட்டினார்" என்று கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 7 சுற்று சுவர்கள் இருக்கின்றன. இதில் ஒன்று திருமங்கை மன்னர் கட்டியது. இன்றும் இவருடைய பெயரில் இந்த சுவர் குறிப்பிடப்படுகிறது. இந்த வரலாற்றைதான் அரவிந்தலோசனன் கூறியுள்ளார். ஆனால் புத்தர் சிலையை கொள்ளையடித்து சுற்றுச்சுவர் கட்டியதாக கூறிய தகவல்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பௌத்த மற்றும் சமண மதங்களின் வழிப்பாட்டு தலங்களையும், பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கிதான் இந்து மதம் வளர்ந்திருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் அக்கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்து மதத்தின் ஆன்மிக பேச்சாளர்களே புத்தர் சிலையை கொள்ளையடித்துதான், ஸ்ரீரங்க கோயிலின் சுற்று சுவர் கட்டியதாக தற்போது பேசியிருப்பது இந்த விமர்சனங்களை இன்னும் கூர்மையாக்கியுள்ளது.
ஒரு தரப்பினர் இது உண்மையான வரலாறு கிடையாது, தல வரலாறு என்னும், மற்றொரு தரப்பினர், பெரும்பான்மை மதம் எப்படி வளர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம் எனவும் கூறி சோஷியல் மீடியாவில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications