வாரிசு அரசியலின் உச்சம்.. மேடைய கொஞ்சம் பாருங்க.. திமுக மகளிர் உரிமை மாநாட்டை விளாசிய குஷ்பு!
சென்னை: நேற்று திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்ற நிலையில், வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புபவர்கள் என்று நாங்கள் சொல்லியதை சரியென திமுக நிரூபித்துள்ளது என குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் 'மகளிர் உரிமை மாநாடு' நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி முன்னிலை வகிக்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, ஆனி ராஜா, டிம்பிள் யாதவ், சுஷ்மிதா தேவ், ராக்கி பிட்லன் உள்ளிட்ட முக்கியமான அகில இந்திய பெண் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, திமுக மகளிர் மாநாடு வாரிசு அரசியலின் உச்சம் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மாநாடா? அல்லது வாரிசு அரசியலின் காட்சியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் மகள், முகமது முப்தி சயீத் சாப்பின் மகள், சரத் பவாரின் மகள், அகிலேஷ் யாதவின் மனைவி, சந்தோஷ் மோகன் தேவின் மகள், கருணாநிதியின் மகள் உள்ளிட்டோர் கருணாநிதியின் மகன் தலைமையில் அரசியல் குடும்ப அடையாளங்களைக் கொண்டவர்கள் ஒன்று கூடி உள்ளனர்.
இந்தியா என்ற இந்தக் கூட்டணியில் தந்தையோ, கணவரோ, அரசியல் குடும்பப் பெயரோ இல்லாமல் தானே சாதித்து வெற்றி பெற்ற எந்தப் பெண்ணும் இல்லையா? வாரிசு அரசியலின் உச்சம் இது. வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என நாங்கள் கூறுவதை சரி என நிரூபித்திருக்கிறார்கள்" என குஷ்பு தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக












Click it and Unblock the Notifications