பொங்கலுக்கு 5 நாளைக்கு முன்பே பரிசு தொகுப்பு வினியோகம்.. தமிழக அரசின் ரூ.1000 எப்போது? புது அப்டேட்
சென்னை: பொங்கல் நேரத்தில் பச்சரிசி தேவை அதிகம் உள்ளதால், பச்சரியை தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியிருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிட உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கமாகும்.

அதன்படி கடந்த வருடம், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் போன்றவை இடம் பெற்றிருந்தது...
அதனால் இந்த வருடமும் பொங்கலுக்கும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு:
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னை சோழிங்கநல்லூரில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும்? கூடுதல் பொருட்கள் குறித்தெல்லாம் பல்வேறு தகவல்களை கூறியிருந்தார்.
"பொங்கல் தொகுப்பை வரும் வாரத்தில் முதலமைச்சர் அறிவிப்பார். அதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறையுடன் சேர்ந்து அனைத்து ஏற்பாடும் மேற்கொண்டு வருகிறோம். கூடுதல் பொருட்கள் என்பது கொள்கை ரீதியிலான முடிவு என்று ஏற்கனவே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு:
முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கக்கூடிய அறிவிப்புகளை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்க கூடாது. முதல்வர் அறிவிப்புக்கு நாம் காத்திருக்க வேண்டும். அநேகமாக அறிவிப்பு அடுத்த வாரத்திலேயே வரும்.. பொங்கல் நேரத்தில் பச்சரிசி தேவை அதிகம் உள்ளதால், பச்சரியை தட்டுபாடின்றி வழங்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இந்நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் நாகைக்கு வருகை தந்தார்.. டிசம்பர் 26ம் தேதி 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.. நாகைக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன், சுனாமியில் பெற்றோர்களை இழந்து அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் 40க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து பேசினார்.
பிறகு அன்னை சத்யா காப்பகத்தில் தங்கி பயின்று தற்போது திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பெண்களை, ராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் ப.ஆகாஷ் ஆகியோர் சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.. அப்போது பிறந்து 22 நாட்களே ஆன ஒரு குழந்தைக்கு ராஜி என ஜெ.ராதாகிருஷ்ணன் பெயர் சூட்டினார்.
இயற்கை பேரிடர்:
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டாலும், அதிலிருந்து மீண்டு வந்து, இன்று சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்த பிள்ளைகள் உயர்ந்துள்ளனர். இவர்கள் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் உள்ளனர்.. சுனாமியின்போது என்னை "அப்பா" என அழைத்தவர்கள் இன்று பெரியவர்களாக வளர்ந்து திருமணமாகி, குழந்தைகள் பெற்று, என்னை "தாத்தா" ஸ்தானத்திற்கு புரமோஷன் தந்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்" என்றார்.
புதிய ரேஷன் கார்டு:
முன்னதாக புதிய ரேஷன் கார்டுகள் குறித்து ராதாகிருஷ்ணன் சொல்லும்போது, "1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது.. பருப்பும் தயார் நிலையில் உள்ளது. உணவு பாதுகாப்பு துறையில் ஸ்பெஷல் பிடிஎஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் 2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளது. 1.54 கோடி புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications