மதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று திருப்பத்தூரை தவிர 36 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. அதில் சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர்,வேலூர், விருதுநகர், திருவண்ணாமலை உள்பட 9 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் 308

மதுரையில் 308

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை பார்ப்போம். சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 308 பேருக்கும், செங்கல்பட்டில் 274 பேருக்கும், திருவள்ளூரில் 209 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், ராமநாதபுரத்தில் 93பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 83 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் 179

வேலூர் 179

வேலூரில் 179 பேருக்கும், சேலத்தில் 50 பேருக்கும், திருவாரூரில் 15 பேருக்கும், தேனியில் 24 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்பரத்தில் 109 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 41 பேருக்கும், திருச்சியில் 86 பேருக்கும், தென்காசியில் 40 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், கடலூரில் 39 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் 67

ராணிப்பேட்டையில் 67

கன்னியாகுமரியில் 8 பேருக்கும், சிவகங்கையில் 88 பேருக்கும், தஞ்சாவூரில் 16 பேருக்கும், திருநெல்வேலியில் 48 பேருக்கும், திருப்பூரில் 6 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 26 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 67 பேருக்கும், தர்மபுரியில் 9 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 6 பேருக்கும், கரூரில் 10பேருக்கும், நீலகிரி மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும், திண்டுக்கல்லில் 74 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே ஜூலை 5ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக சென்னையில் 24890 பேரும், செங்கல்பட்டில் 3068 பேரும், மதுரையில் 2975 பேரும், திருவள்ளூரில் 1650 பேரும், காஞ்சிபுரத்தில் 1531 பேரும், திருவண்ணாமலையில் 1342 பேரும், வேலூரில் 1347 பேரும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராமநாதபுரத்தில் 941 பேரும், தேனியில் 634 பேரும், சேலத்தில் 842 பேரும், திருச்சியில் 485 பேரும், விழுப்புரத்தில் 565 பேரும், திருவாரூரில் 191 பேரும், தூத்துக்குடியில் 311பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 468
  • செங்கல்பட்டு 6633
  • சென்னை 68,254
  • கோவை 741
  • கடலூர் 1257
  • தர்மபுரி 121
  • திண்டுக்கல் 704
  • ஈரோடு 248
  • கள்ளக்குறிச்சி 1205
  • காஞ்சிபுரம் 2547
  • கன்னியாகுமரி 560
  • கரூர் 166
  • கிருஷ்ணகிரி 185
  • மதுரை 4085
  • நாகப்பட்டினம் 285
  • நாமக்கல் 109
  • நீலகிரி 124
  • பெரம்பலூர் 168
  • புதுக்கோட்டை 350
  • ராமநாதபுரம் 1385
  • ராணிப்பேட்டை 1148
  • சேலம் 1247
  • சிவகங்கை 512
  • தென்காசி 448
  • தஞ்சாவூர் 496
  • தேனி 1009
  • திருப்பத்தூர் 259
  • திருவள்ளூர் 4806
  • திருவண்ணாமலை 2497
  • திருவாரூர் 539
  • தூத்துக்குடி 1162
  • திருநெல்வேலி 1030
  • திருப்பூர் 204
  • திருச்சி 972
  • வேலூர் 1932
  • விழுப்புரம் 1186
  • விருதுநகர் 895
    • விமான நிலைய கண்காணிப்பில் 432
    • (வெளிநாடு)

      • விமான நிலைய கண்காணிப்பில் 366
      • (உள்நாடு)

        • ரயில் நிலைய கண்காணிப்பில்: 416

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+