28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.. மோசமான பாதிப்பை சந்தித்த மாவட்டங்கள்.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை காண்போம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1489 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30444
ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேர், திருவள்ளூரில் 78 பேர், திருவண்ணாமலையில் 49 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 22 பேர், தூத்துக்குடியில் 28 பேர், திருநெல்வேலியில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 11 பேருக்கும், கன்னியாகுமரியில் 10 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், கரூரில் 5 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கும், பெரம்பலூரில், திருப்பத்தூரில் தலா 2 பேருக்கும், திருவாரூரில் 14 பேருக்கும், வேலூரில் 13 பேருக்கும், விழுப்புரத்தில் 10 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை 13 பேர்

சிவகங்கை 13 பேர்

தென்காசி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், ராணிப்பேட்டையில் 2 பேருக்கும், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகரில் தலா ஒருவருக்கும், திருச்சியில் 6 பேருக்கும், சிவகங்கையில் 13 பேருக்கும், தஞ்சாவூரில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42687 பேரில் 23409 பேர் குணம் அடைந்துவிட்டனர். 397 பேர் உயிரிழந்து 18878 பேர் கொரோனா தொற்றுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 14180 பேர் சிகிக்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1531 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூரில் 928 பேரும், திருவண்ணாமலையில் 220 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் அதிகம்

தூத்துக்குடியில் அதிகம்

காஞ்சிபுரத்தில் 258 பேரும், மதுரையில் 135 பேரும், தூத்துக்குடியில் 131 பேரும், வேலூரில் 90 பேரும், விழுப்புரத்தில் 72 பேரும், திருவாரூரில் 69 பேரும், ராணிப்பேட்டையில் 84 பேர், கள்ளக்குறிச்சியில் 83 பேரும், கடலூரில் 77 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திண்டுக்கல்லில் 58 பேருக்கும், கன்னியாகுமரியில் 48 பரும் நாகப்பட்டினத்தில் 53 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


தமிழகத்தில் 42687பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 13 ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 392
  • செங்கல்பட்டு 2705
  • சென்னை 30444
  • கோவை 173
  • கடலூர் 533
  • தர்மபுரி 26
  • திண்டுக்கல் 207
  • ஈரோடு 72
  • கள்ளக்குறிச்சி 330
  • காஞ்சிபுரம் 672
  • கன்னியாகுமரி 120
  • கரூர் 93
  • கிருஷ்ணகிரி 38
  • மதுரை 409
  • நாகப்பட்டினம் 106
  • நாமக்கல் 92
  • நீலகிரி 14
  • பெரம்பலூர் 145
  • புதுக்கோட்டை 51
  • ராமநாதபுரம் 135
  • ராணிப்பேட்டை 191
  • சேலம் 222
  • சிவகங்கை 75
  • தென்காசி 118
  • தஞ்சாவூர் 150
  • தேனி 138
  • திருப்பத்தூர் 45
  • திருவள்ளூர் 1797
  • திருவண்ணாமலை 636
  • திருவாரூர் 120
  • தூத்துக்குடி 427
  • திருநெல்வேலி 443
  • திருப்பூர் 115
  • திருச்சி 154
  • வேலூர் 142
  • விழுப்புரம் 421
  • விருதுநகர் 163
  • விமான நிலைய கண்காணிப்பில்: 190
    (வெளிநாடு)


    விமான நிலைய கண்காணிப்பில் 74
    (உள்நாடு)

    ரயில் நிலைய கண்காணிப்பில்: 2309

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+