இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க விஜய்.. நேரம் பார்த்து அடித்த திவ்யா சத்யராஜ்!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளது தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் விஜய்க்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். தொடர்ந்து திமுகவில் அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

விஜய்யை விமர்சித்த திவ்யா சத்யராஜ்
திமுகவில் இணைந்ததில் இருந்தே திவ்யா சத்யராஜ் விஜய்யை விமர்சித்து வருகிறார். டான்ஸ் ஆடுகிறவர் எல்லாம் தலைவர் கிடையாது.. மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்.. ஒருவரை பிடிக்கும் என்பதற்காக ஓட்டுப் போடக்கூடாது என்றெல்லாம் பேசினார். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திலும் விஜய் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் நடிகராக எனக்கு யோகி பாபுவை கூட பிடிக்கும். அதற்காக அவர் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போடுவேனா என்று கேட்டால் அவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்.. அவர் கொள்கை என்ன.. எல்லாத்தையும் பார்த்து தான் ஓட்டு போடுவேன்.. திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் எல்லாம் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்..
விஜய் பெர்சனல் வாழ்க்கை
எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் போல், ஆபீஸ் ரூமில் இருந்துகொண்டு லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷனில் பேசுகின்றவர் தலைவர் கிடையாது என்றும் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு கேள்விகளை எழுப்பி வீடியோ பதிவிட்டுள்ளார் திவ்யா சத்யராஜ்.. இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
விஜய் சாரோட பெர்சனல் வாழ்க்கையை பத்தி பேசுவது அநாகரீகமானது.. எனவே அதைப்பற்றி நான் ஒருபோதும் பேசமாட்டேன்.. ஆனால் இரண்டு விஷயங்கள் அவரிடம் கேட்க வேண்டும்.
அரசியலுக்கு வரும் முன் என்ன செய்தீர்கள்?
முதல் கேள்வி, நீங்க அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி மக்களுக்கு என்ன செய்து இருக்கிறீர்கள்.. ஒரு லிஸ்டை பப்ளிக்கா சம்மிட் பண்ணுங்க.. இதே கேள்வியை நீங்களும் என்ன பார்த்து கேட்கலாம்.. நானும் இப்போது அரசியலில் இருக்கிறேன்..
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி என் சொந்த காசில் எனது அம்மா பெயரில் தொண்டு நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே இருக்கின்ற மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு, வைட்டமின் மாத்திரைகள் இரும்பு சத்து மாத்திரைகள் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருந்தேன்.
இன்னொரு கேள்வி.. பெரியாரை கொள்கை தலைவராக வைத்துக்கொண்டுள்ள உங்க கட்சியில் இருக்கின்றவர்கள் பெண்களை கொச்சை கொச்சையாக பேசுகிறார்கள். பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க மாட்டுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications