பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே!
சென்னை: சென்னை பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக சார்பில் நட்சத்திர வேட்பாளரை களம் இறக்க திமுக திட்டமிட்டு வருகிறதாம். பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை சுமார் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் வெற்றி பெற்றார். தற்போதைய நிலையில் ஆர்டி சேகரே போட்டியிட வாய்ப்பு அதிகம் என்பதாக உள்ளது. அதேநேரம் விஜய் போட்டியிடுவது உறுதியானால், விஐபி வேட்பாளராக சத்யராஜ் மகள் திவ்யாவை திமுக களம் இறங்க வாய்ப்பு உள்ளதாம்.
சென்னை பெரம்பூரை பொறுத்தவரை 1967க்கு பிறகு தி.மு.க. 9 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 3 முறையும், அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெறுள்ளன. கடைசிய 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஆர்.டி.சேகரும், அ.தி.மு.க. சார்பில் கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.தனபாலனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 267 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் சுமார் 54000 ஆகும்.

ஆனால் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் 50 ஆயிரத்து 291 வாக்குகளையே பெற்றார். நாம் தமிழர் கட்சி 19,821 பெற்றது. மக்கள் நீதி மய்யம் 17,072 வாக்குகளையும் பெற்றிருந்தது. சுமார் 50000 வாக்குவித்தியாசத்தில் திமுக வென்ற தொகுதியில் இந்த முறை விஜய் நிற்க முடிவு செய்திருப்பதே முதலில் ஆச்சரியமான பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடந்த தேர்தல் வரலாற்றையும், முடிவையும் வைத்து பார்க்கும்போது பெரம்பூர் தொகுதி, திமுக நேரடியாக களம் கண்டு அதிக முறை வென்றுள்ளது. திமுகவின் செல்வாக்கு அதிகம் உள்ள பெரம்பூர் தொகுதியை விஜய் தேர்வு செய்திருப்பதை தவெகவினரே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். பெரம்பூரை பொறுத்தவரை தொழிலாளர்கள், பெண் வாக்காளர்கள் நிறைந்த தொகுதியாகும். பெண்கள் மற்றும் இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டுப்போடுவார்கள் என விஜய் நம்புகிறார்கள்.
35 வயதிற்கு கீழ் உள்ள வாக்காளர்களே வெற்றியை தீர்மானிப்பதை முக்கிய பங்கு வகிப்பார்கள் என்கிற நிலையே பெரம்பூரில் உள்ளது. அங்கு விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். தவெக கட்சியின் நிர்வாகிகள் எண்ணிக்கையும் பெரம்பூரில் அதிகமாக உள்ளது. எனவே எப்படியும் ஜெயித்துவிடலாம் என்று விஜய் நம்புகிறார். அதுமட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு விஜய் படம் என்றால் மிகவும் பிடிக்கும். விஜய் அரசியலில் இறங்கி உள்ளதால், அவர்கள் வாக்களிப்பார்கள் என்று தவெக நம்புகிறது. அதுவும் விஜய் பெரம்பூரில் நிற்க காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுன்றி அதிமுகவிற்கு கணிசமான ஆதரவு உண்டு. எனவே பெரம்பூரில் வாக்குகள் மூன்றாக பிரியும் போது, விஜய்க்கு சாதகமாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் வலுவான வேட்பாளரை களம் இறக்கலாமா என்று திமுக தலைமை யோசிக்கிறதாம். ஆர்டி சேகர் வலுவான வேட்பாளர் தான் என்றாலும், நட்சத்திர அந்தஸ்து உள்ள வேட்பாளர்கள் யாரையாவது நிறுத்தி விஜய்யை தோற்கடிக்க திமுக திட்டமிட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக பெரம்பூரில் நடிகர் சத்யராஜ் மகளை நிறுத்தி விஜய்யை தோற்டிக்கலாமா என்று திமுக திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் பரவி வருகிறது. எனினும் சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவலின் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.. எனினும் பெரம்பூரில் விஜய் நின்றால், அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை திமுக கண்டிப்பாக நிறுத்தும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications