எல்லாம் வெறும் ட்ராமா.. தேவை முடிந்ததும் ஓபிஎஸ்ஸை கழட்டி விட்டுள்ளார் எடப்பாடி! சொல்கிறார் திவாகரன்
சென்னை: அதிமுகவில் தலைமை குறித்த குழப்பம் தொடரும் நிலையில், அண்ணா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திவாகரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இன்று வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார்.
அதேபோல ஓ பன்னீர்செல்வமும் கட்சியிலிருந்து நீக்கச் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிமுக தலைவர்கள் ஓபிஎஸை கடுமையாகச் சாடி பேசினார்.

எல்லாம் ட்ராமா
இதற்கிடையே அதிமுக விவகாரம் குறித்து அண்ணா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திவாகரன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திவாகரன், "இன்றைக்கு நடந்த அதிமுக பொதுக்குழு வெறும் ட்ராமா. அவர்களுக்கு வேண்டியவர்களைக் காசு கொடுத்து விலைக்கு வாங்கி கூட்டத்தில் அமர வைத்துள்ளனர்.

சசிகலா
கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்களையும் போட்டுள்ளனர். சசிகலாவுடைய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் விரைவில் தீர்பு வரும். அந்த தீர்ப்பைப் பொறுத்துத்தான் இன்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பது தெரியவரும். கட்சியில் இருந்த யாரையும் நீக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.

ஓபிஎஸ் தேவைப்பட்டார்
மனிதர்கள் என்றால் தவறு செய்வது இயல்பு அதற்காக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது என்று ஜெயலலிதா இருந்தபோதே அவர்களிடமே நான் கூறியுள்ளேன். ஓபிஎஸ் இல்லையென்றால் நான்காண்டுக் கால ஆட்சியை எடப்பாடி பூர்த்தி செய்திருக்க முடியாது. அப்போது எடப்பாடிக்கு ஓபிஎஸ் தேவைப்பட்டார். எடப்பாடிக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் தேவைப்படுகின்றனர்.

எடப்பாடி மீது தாக்கு
தேவைப்படுபவர்களை அப்போது பயன்படுத்திக் கொண்டு அவர்களைத் தூக்கி எறிவது தான் எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கை. எடப்பாடி தெளிவான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது தான் என்னுடைய இலக்கு" என்று அவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

திமுக
தொடர்ந்து திமுக அரசை விமர்சித்துப் பேசிய அவர், "எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக எவ்வாறு எல்லாம் பேசியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சிக்கு வந்ததும் இதை எல்லாம் செய்தாரா. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை கொடுத்து எவ்வளவு நாள் ஆயிற்று இதுவரை நடவடிக்கை எடுத்தாரா? ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை மற்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஆகியவற்றில் திமுக என நினைக்கிறதோ அதை நோக்கித்தான் வழக்குகளின் விசாரணை போய்க்கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications