லட்டு மாதிரி வாய்ப்பு.. இந்த வருஷம் தீபாவளிக்கு 4 நாள் லீவு! ‘இது’ மட்டும் நடந்தால் போதும்! ஹேப்பி!
சென்னை: தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரு நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறை சேர்த்து மொத்தம் மூன்று நாள் விடுமுறை கிடைக்கிறது. தற்போது, தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள், பொதுமக்களிடமிருந்து முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது. இனிப்புகள் தயாரித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது என தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்.
இந்த ஆண்டு தீபாவளி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் வரும் காரணத்தால், வழக்கமான வார விடுமுறையுடன் சேர்த்து மொத்தம் மூன்று நாள் விடுமுறை கிடைக்கும். இதனால் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தீபாவளி 2025
இந்நிலையில், பலரும் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை கூட அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் முக்கிய பண்டிகைகளின் போது, பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதே நடைமுறை இம்முறையும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை மட்டுமல்லாமல், முன்னர் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால், மொத்தம் மூன்று நாள் விடுமுறை ஏற்கனவே உறுதி தான்.
வார இறுதி விடுமுறை
ஆனால், அடுத்த நாள் விடுமுறை கூடுதலாக சேர்க்கப்பட்டால், 4 நாள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறை சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பயணங்களை அவசரமின்றி திட்டமிடவும், வீட்டு வேலைகளை முடிக்கவும், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவும் உதவும். இந்த நிலையில், பொதுமக்கள் தீபாவளி விடுமுறை நாள்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ரயில், பேருந்து முன்பதிவுகளைச் செய்து, பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆர்வமாக இருக்கின்றனர்.
அரசு விடுமுறை அறிவிப்பு
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கும் பணிச்சுமை குறையும் வகையிலும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து 31, 1, 2, 3 அதாவது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு வரை விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
அரசு ஊழியர்கள் கோரிக்கை
தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. எனவே கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த ஆண்டுபோல் கடைசி நேரத்தில் விடுமுறையை அறிவிக்காமல் அக்டோபர் தொடக்கத்திலேயே விடுமுறையை அறிவித்தால் ரயில் டிக்கெட் முன்பதிவு, பேருந்து முன்பதிவு போன்றவற்றைச் சிரமமின்றி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனக் கோரிக்கையை விடுக்கின்றனர் பொதுமக்கள்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications