மூச்சுத் திணற வைத்த காற்று மாசுக்கு இடையே சின்ன ஆறுதல்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அப்டேட்
சென்னை: தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகளை வெடித்து தள்ளினர். இதனால், காற்று மாசு கடுமையாக அதிகரித்து இருந்தது. எனினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு காற்று மாசின் அளவு குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் உட்கொண்டு மகிழ்ந்தனர். பின்னர் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடும் தமிழக அரசு விதித்து இருந்தது. எனினும், நேரக்கட்டுப்பாட்டை தாண்டி பல இடங்களில் பட்டாசுகளை வெடித்து தள்ளினர். இதற்கிடையில் பட்டாசு வெடித்த காரணத்தால் காற்று மாசு மோசமாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் காற்று மாசு அதிக அளவில் இருந்தது. நேற்று இரவு நேரத்தில் அடர் பனி போல புகை மூட்டமாக காட்சியளித்தது.
சென்னையில் காற்று மாசு: சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 250க்கு மேல் உள்ளது. இது மிக மோசமான நிலைமை ஆகும். நீண்ட காலத்திற்கு வெளிப்படும் போது மக்கள் இதை சுவாசிக்கும் போது ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும். வேளச்சேரியில் தரக்குறியீடு 301ஐ தொட்டது. இது மிக மோசமான ஆரோக்கியமான நிலை ஆகும்.
இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடியில் தரக்குறியீடு 231ஐ தொட்டது. இதுவும் ஆரோக்கியமற்ற நிலையாகும். செங்கல்பட்டில் தரக்குறியீடு 242 ஆக இருந்தது. ஏற்கனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் மேலும் பாதிக்கப்படலாம். நேற்று காற்று மாசு அதிகரித்ததால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடந்த ஆண்டை விட குறைவு: எனினும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவாக இருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் கடந்த ஆண்டு காற்று மாசு 545 ஆக பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு 365 ஆக குறைந்தது. அதேவேளையில், சென்னையில் ஒலி மாசு கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒலி மாசு அதிகரித்துள்ளது.
தி.நகர், வளசரவாக்கம், நுங்கம் பாக்கம், திருவெற்றியூரில் ஒலி மாசு அதிகரித்துள்ளது. அதேபோல் தீபாவளி நாளில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 2,095 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சென்னையில் மட்டும் 581 வழக்குககள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications