சென்னை டூ நாகர்கோவிலுக்கு புதிதாக ஒரு சிறப்பு ரயில்.. தீபாவளிக்கு ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாளை மாலை 3.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, நெல்லை வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.

சென்னை கிளாம்பாக்கம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் இன்றே அலைமோதுகிறது. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்களில் சில வினாடிகளில் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் மூச்சு முட்டும் அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. நாளையும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிபார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிபார்க்கப்படுகிறது. இதனால், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ஏசி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
* வண்டி எண்: 06109 தாம்பரம் - நாகர்கோவில் ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் புறப்படும். மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு நாகர்கோவிலுக்கு இந்த ரயில் சென்றடையும்.
* இந்த ரயில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு அதிகாலை 2.30 மனிக்கு சென்றடையும். 5 நிமிடங்கள் நெல்லையில் நிற்கும் இந்த ரயில், நாகர்கோவிலுக்கு 4.40 மணிக்கு சென்று சேரும்.
* மறுமார்க்கத்தில், 31 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நெல்லைக்கு 10.05 மணிக்கு வரும். நெல்லையில் இருந்து 10.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு இரவு 9.55 மணிக்கு வந்து சேரும்.
* இந்த ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும். 14 ஏசி கோச்களும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்களும் கொண்டதாக இந்த ரயில் இருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications