தீபாவளி விடுமுறை! "அமுக்கு டுமுக்கு அமால் டுமால்" குழந்தைகளுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஈடு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 16,17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கான லோகோவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழர்களின் கலை படைப்புகள் உலகளவில் செல்வாக்கு பெறும் நிலை உருவாகும் என்றார்.

மழைக் காலங்கள்
மேலும் அவரிடம் மழைக் காலங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், கடந்த ஆண்டுகளைப் போல் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்படவில்லை. பாடங்களை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் அடுத்த நாளான 25 ஆம் தேதி விடுமுறை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 25 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. அந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக பள்ளிகள் இயங்கும். அது போல் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்
அதன்படி மாவட்ட ஆட்சியர்களும் மழையின் சூழலுக்கேற்ப விடுமுறை அறிவித்து வருகிறார்கள். இந்த மழை நாள் விடுமுறை நாட்களை ஈடு செய்ய தேவைப்பட்டால் நிச்சயமாக பள்ளிகளை வார விடுமுறையின் போது இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதான்
நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே பள்ளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சிதான். அவ்வப்போது தொடர் மழையால் விடுமுறை அறிவிப்பார்கள். அதே நேரம் குழந்தைகளுக்காக எழுந்து சாப்பாடு கட்டும் வேலை இல்லாததால் குழந்தைகளின் தாய்களுக்கும் இந்த விடுமுறையால் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிறு தூரல்
சிறு தூரல் போட்டால் கூட நமக்கும் லீவு கிடைக்குமா என்பார்கள். பக்கத்து மாவட்டத்திற்கு லீவு விட்டால் கூட இந்த மாவட்டத்திற்கு லீவு கிடைக்குமா என்பதை டிவியில் செய்திகளை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி 2 தினங்கள் வெளுத்துவிட்டது. இதற்கு 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

9 இல் காற்றழுத்தம்
நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அது போல் அந்த காற்றழுத்தம் தமிழகம்- புதுவை இடையே வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இனி லீவு வேட்டை என எதிர்பார்த்து காத்திருந்த குட்டீஸ்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications