காசில்லைனு புலம்பி..60 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த மக்கள்! 800 கோடியை குடித்தே அழித்த குடிகாரர்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 25 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. தங்கத்தை மட்டுமே சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் வாங்கி இருக்கிறார்கள். சுமார் 50 முதல் 60 டன் தங்கம் விற்பனையானதாக சொல்லப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுகடைகள் மூலம் சுமார் 789 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் மகிழ்ச்சி 'மழை'யோடு, பொருளாதார ரீதியாகவும் புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, மின்சாதனங்கள் மற்றும் மதுவிற்பனை போன்ற துறைகளில் விற்பனை அதிக அளவில் உயர்ந்துள்ளதுடன், மொத்த விற்பனை மதிப்பு ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
முக்கியமாக தங்கத்தின் விலை உயர்ந்திருந்த போதிலும், மக்களிடம் தங்க நகை வாங்கும் ஆர்வம் குறையவில்லை. தந்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 50 முதல் 60 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.85,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி விற்பனை
இது கடந்த ஆண்டை விட சுமார் 35 முதல் 40 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததால், விற்பனையின் மதிப்பு உயர்ந்தாலும், அளவில் அதே அளவிலேயே இருப்பதாக இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே தெரிவித்துள்ளார். தங்க விலை உயர்ந்ததால் பலர் மாற்றாக வெள்ளி நகைகள், பாத்திரங்கள் வாங்கியுள்ளனர்.
தங்க விற்பனை
இதன் காரணமாக வெள்ளி விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி முடிவில் மொத்த தங்க விற்பனை 100 முதல் 120 டன் வரை, அதாவது ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி வரையிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஜிஎஸ்டி குறைப்பும் பண்டிகை விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கட்டண அமைப்பை மத்திய அரசு மறுசீரமைத்தது. இதன் மூலம் 5%, 12%, 18%, 28% என இருந்த நான்கு அடுக்கு வரி அமைப்பு தற்போது 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி "ஜிஎஸ்டி 2.0 - தீபாவளி பரிசு" என்று குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி குறைப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நேரடி பலன் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி போன்ற மின்சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்திய வர்த்தக சங்கம் (CAIT) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த தீபாவளி காலத்தில் மின்சாதனங்களின் மொத்த விற்பனை மட்டும் ₹10,000 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
டாஸ்மாக் விற்பனை
மாநில அளவில் பார்ப்பதற்கும் விற்பனை சிறப்பாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூன்று நாட்களில் ரூ.789.85 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டைவிட சுமார் ₹30 கோடி அதிகம் விற்பனை பதிவாகியுள்ளது. அதில் மதுரை மண்டலத்தில் மட்டும் ரூ.170.64 கோடி மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. மொத்தத்தில், தங்கம், மின்சாதனங்கள், மதுவிற்பனை ஆகியவற்றின் சாதனை உயர்வும், ஜிஎஸ்டி குறைப்பின் நேரடி பலன்களும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை பொருளாதார ரீதியாக அரசுக்கு வரி "வருமான தீபாவளி"யாக மாற்றியுள்ளன.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications