Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி அருகே ரூ100 கோடியில் பெரியார் சிலை என்பது உண்மைக்கு புறம்பானது: தி.க. விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி அருகே பெரியாருக்கு ரூ100 கோடியில் 135 அடியில் சிலை வைக்கப்படுவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என்று திராவிடர் கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் திருச்சி அருகே அமைக்கப்படும் பெரியார் உலகத்தில் 95 அடி உயரத்தில்தான் பெரியார் சிலை அமைக்கப்படுகிறது என்றும் திராவிடர் கழகத்தின் நாளேடான விடுதலை தெரிவித்துள்ளது.

Recommended Video

    பெரியாருக்கு 100 கோடியில் சிலை.. முதல்வர் Stalin வெளியிட்ட அறிவிப்பு

    திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் அருகே பெரியார் உலகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பெரியார் உலகம் அமையும் இடத்தில் பெரியாருக்கு சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது.

    பெரியார் சிலை 135 அடியில் ரூ100 கோடியில் அமைக்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

     சீமான் எதிர்ப்பு

    சீமான் எதிர்ப்பு

    இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். பெரியார் பொதுமக்களிடம் நிதி சேகரித்து பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினார். இன்று அவை யாரிடம் இருக்கிறது உங்களுக்கு தெரியும். மக்களின் வறுமையை போக்க பாடுபட்ட சீர்திருத்தவாதி பெரியாருக்கு ரூ100 கோடியில் எதற்கு சிலை? பெரியாருக்கு தமிழகத்தில் அளாவுக்கு அதிகமாகவே சிலைகல் வைக்கப்பட்டுள்ளன. அங்கே வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி சிலை அமைப்பதற்கும் நீங்கள் பெரியாருக்கு சிலை அமைப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்ன தேவை? கிராமங்களில் சொல்வார்களே.. பெருமைக்கு எருமை மேய்ப்பது போலத்தான் இருக்கு. இதுக்கு பேரு பணக்கொழுப்பு. அதிகாரத் திமிர். இதனை ஐயா பெரியார் இருந்தால் விரும்புவாரா? என கேட்க விரும்புகிறேன். பெரியார் தன் கைத்தடியாலேயே விரட்டி விரட்டி அடித்திருப்பார். இதையெல்லாம் பேசினால் ஆ... திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.. திராவிடம் என்றால் எரிகிறது என்பார்கள்.. திராவிடம் என்றால் எரியத்தான் செய்யும்.. வேறு என்ன செய்யும்? உங்களுக்குத்தானே எரியும் என கூறியிருந்தார்.

     சீமானுக்கு கடும் கண்டனம்

    சீமானுக்கு கடும் கண்டனம்

    சீமானின் இந்த பேச்சுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியாருக்கு சிலை இருக்கக் கூடாது என்கிற பாஜகவினரைப் போல பேசுகிறார் சீமான் என அவர்கள் கூறியிருந்தனர். இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சனையாகவும் வெடித்தது.

     திமுக உருவாக்கிய குருகல்

    திமுக உருவாக்கிய குருகல்

    இதற்கு மறுநாள் சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயந்தவை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்துப் பேசுவதென்றால், தமிழக சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும். பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.

     சமூக நீதிநாள்- முதல்வர் ஸ்டாலின்

    சமூக நீதிநாள்- முதல்வர் ஸ்டாலின்

    பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் அறிவிக்கிறேன். தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்புக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவை தெரிவித்து வருகின்றன.

     ரூ100 கோடியில் சிலையா?

    ரூ100 கோடியில் சிலையா?

    இந்நிலையில் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலையில் திராவிடர் கழக தலைமை நிலையம் பெயரில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விடுதலையின் 8-ம் பக்கத்தில் பெரியார் உலகம் ஒரு முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி: நூறு கோடி ரூபாயில் பெரியார் சிலையா? இந்த கரோனா காலத்தில் இது தேவையா? என்று தன் மனப்போக்கில் தவறான தகவல்களை சில ஊடகங்கள் திட்டமிட்டு பரப்ப ஆரம்பித்துவிட்டன. சமூக வலைதளங்களிலும் தம் விருப்பத்துக்கு ஏற்ப எதை எதையோ எழுதித் தங்கள் வயிற்று எரிச்சலைத் தீர்த்துக் கொள்கின்றனர். பெரியார் உலகம் என்பது பெரியார் சிலை மட்டுமல்ல.

     95 அடி உயரத்தில் பெரியார் சிலை

    95 அடி உயரத்தில் பெரியார் சிலை

    27 ஏக்கர் பரப்பில் 40 அடி பீடம், 95 அடி உயர பெரியஅர் சிலை, தந்தை பெரியார் ஒலி, ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், பெரியார் படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய என பல அம்சங்களுடன் பூத்து குலுங்குவதுதான் பெரியார் உலகம். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் சிலை மட்டும் நூறு கோடி ரூபாயில் உருவாகிறது என்பது உண்மைக்கு மாறானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+