சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலை அப்படி சொன்னதுதான் மிச்சம்.. சீறி வந்த கி.வீரமணி.. என்ன இப்படி சொல்றாரே! பரபர மோதல்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட வேண்டும் என்று பாஜகவை மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்து பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிர்க்கட்சி யார் என்ற மோதல் பாஜக அதிமுக இடையில் எழுந்துள்ளது. அதிமுக, எம்எல்ஏ பலம் மக்கள் ஆதரவு படி நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறி வருகிறது. அதோடு பாஜக எதிர்க்கட்சி போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அதை முறியடிக்க வேண்டும் என்றும் அதிமுக தலைவர்கள் பொன்னையன், செல்லூர் ராஜு போன்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாக்குச்சீட்டை காட்டினார்.. ஹெச். டி. ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..பாஜக புகார் வாக்குச்சீட்டை காட்டினார்.. ஹெச். டி. ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்..பாஜக புகார்

இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையோ, தமிழ்நாட்டில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுகதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக வீரமணி

பாஜக வீரமணி

இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பாஜகவை விமர்சித்து பேசினார். அதில், மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திமுக அரசு மற்றும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மாநில உரிமைகள் குறித்து தமிழக முதல்வரும் தொடர்ந்து பாஜக ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகின்றார்.

திக கூட்டம்

திக கூட்டம்

இந்நிலையில்தான் திராவிட கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப் பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி. மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே.

பாஜக எதிர்க்கட்சி

பாஜக எதிர்க்கட்சி

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்கள் எப்பொழுதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும். எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். பாஜக எப்படி எதிர்க்கட்சி ஆக முடியும்.

மிஸ்டு கால்

மிஸ்டு கால்

மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது. சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக , மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

English summary
DK K Veeramani condemns Annamalai claim of BJP being opponent party. தமிழகத்தில் சொந்தக் காலில் நிற்கும் கட்சிகள்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட வேண்டும் என்று பாஜகவை மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்து பேசி இருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X