மார்கழியில் இறந்த புண்ணியவான் விஜயகாந்த்.. திருமுகத்தை காண தீவுத்திடலில் குவிந்த தொண்டர்கள்
சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்படும் நிலையில் அங்கு தேமுதிக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நிமோனியாவால் இறந்த நிலையில் அவர் நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலுக்கு கருப்பு கண்ணாடி, பட்டாடை, கழுத்தில் கட்சி துண்டு, கையில் கட்சி சின்னம் பதித்த மோதிரம் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு இடநெருக்கடி காரணமாக அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து அவரது உடலை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு பிற்பகலில் மீண்டும் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி இன்று காலை 5.00 மணிக்கு தீவுத்திடலை நோக்கி விஜயகாந்தின் உடல் பயணம் தொடங்கியது. வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் கூடி பீக் ஹவரில் இருப்பதை போன்று டிராபிக் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவுத்திடலில் விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்துள்ளார்கள்.
அங்கு இரவோடு இரவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தப்படும் இடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் காவல் துறை ஆணையர் சஞ்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நள்ளிரவில் ஆய்வு செய்தனர். அங்கு கேப்டன் முகத்தை காண வெளிமாவட்ட மக்கள் குவிந்துள்ளனர். மார்கழி மாதத்தில் இறந்தால் சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்பார்கள். அது விஜயகாந்துக்கு கிடைத்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications