நள்ளிரவை தாண்டியும் சாரை சாரையாக வந்த தொண்டர்கள்.. கண்ணீருடன் ஆறுதல் சொன்ன பிரேமலதா
சென்னை: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நள்ளிரவைத் தாண்டியும் சாரை சாரையாக தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71. செயற்கை சுவாசத்துடன் போராடிய விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமான நிலையில் அவருடைய உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து நேற்று பிற்பகல் 1 மணி முதல் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள், கட்சி பேதமின்றி மற்ற கட்சியின் தொண்டர்கள் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தாய்க்கு பின் தாரம் என்போம்.
அது போல் விஜயகாந்த் சினிமாவில் நடித்த காலம் முதல் நேற்று காலை உயிர் பிரிந்தது வரை கூடவே இருந்து அவருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தவர் பிரேமலதா. இவர் ஆம்புலன்ஸில் வந்தது முதல் கணவரின் கன்னத்தை தொட்டு பார்த்து பார்த்து அழுதுக் கொண்டிருந்தார். அது போல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்ட போதும் அவர் ஓயாமல் அழுது கொண்டிருந்தார்.
நேற்று நள்ளிரவைத் தாண்டியும் ஏராளமான தொண்டர்கள் வந்து கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தினர். குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் என வரிசையில் வந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பிரேமலதாவை கட்டி பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். சளைக்காமல் ஒவ்வொருவருக்கும் பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார்.
அது போல் தொடர்ந்து விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும், பிரேமலதாவும் கண்ணீர் விட்டவாறே இருந்தனர். பிரேமலதா கால் கடுக்க அழுது அழுது வீங்கிய முகத்துடன் காணப்பட்டார். நள்ளிரவில் குழந்தைகள் எல்லாம் வந்த போது அங்கிளை பாரு என அழைத்து காட்டி, அவர்களின் கன்னத்தில் தட்டி நெகிழ்ந்தார்.
அது போல் கொஞ்சம் கூட கூட்டம் குறையாமல் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு விஜய பிரபாகரனும் ஆறுதல் தெரிவித்தார். அவரை சின்ன கேப்டன் கலந்காதீர்கள் என தொண்டர்களும் ஆசுவாசப்படுத்தினர். பிரேமலதா கணவரின் முகத்தை அவ்வப்போது பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார்.
நள்ளிரவில் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் வருகை தந்தனர். விஜய் கண்ணீர் மல்க கேப்டனை பார்த்து அஞ்சலி செலுத்தினார். முடித்துவிட்டு சென்ற போது என்ன தோன்றியதோ மீண்டும் எப்போது பார்ப்போமோ என்ற நினைத்தபடியே 10 வினாடிகள் நின்று விஜயகாந்தின் உடலை பார்வையிட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications