அட.. இப்போதான் அந்த பொலிவு வந்திருக்கு.. விஜயகாந்த் முகத்தில் புதிய புத்துணர்ச்சி.. இதுதான் காரணமா!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது நல்ல புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக இவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்தான் சிகிச்சை முடிந்து பூரண உடல்நலத்துடன் விஜயகாந்த் சென்னை திரும்பினார். அதில் இருந்து தேமுதிக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    பொலிவு இல்லை

    பொலிவு இல்லை

    ஆனால் விஜயகாந்த் உடல்நிலை தேறி வந்தாலும் கூட அவர் முகத்தில் இருந்த பழைய கலை மட்டும் மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது. விஜயகாந்த் முன்பு போல சுறுசுறுப்பாக காணப்படவில்லை. தேமுதிக தொண்டர்கள் அவரை எப்போது பழையபடி பார்ப்போம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

    வெளியே செல்லவில்லை

    வெளியே செல்லவில்லை

    அதேபோல் விஜயகாந்தும் கடந்த சில நாட்களாக எங்கும் வெளியே செல்லாமல் இருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தை கூட தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடக்காமல் அவரது வீட்டிலேயே நடந்தது. செய்தியாளர்களை கூட தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ்தான் சந்தித்து வந்தார்.

    இப்போது பொலிவு

    இப்போது பொலிவு

    ஆனால் திடீரென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது நல்ல புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார். அவர் முகத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் காணப்படுகிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் அவரின் புதிய புகைப்படங்களில் எல்லாம் கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் பொலிவாக சிரித்தபடி காணப்படுகிறார்.

    காரணம்

    காரணம்

    விஜயகாந்த் தற்போது தமிழக அரசியலில் மிக முக்கியமான நபராக மாறியுள்ளார். கடந்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் தோல்வி அடைந்தாலும் கூட அவருடன் கூட்டணி வைப்பதற்காக திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கமல்ஹாசன் என்று எல்லோரும் அவரை சந்திக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் கூட அவரை சென்று சந்தித்துள்ளார். இப்படி எல்லோரும் தனக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதே கூட அவரை மீண்டும் புத்துணர்ச்சி பெற உதவி இருக்கும் என்று கூறலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+