1 மணி நேரம் நடந்த மீட்டிங்.. தொண்டர்களிடம் பேசிய விஜயகாந்த்.. உற்சாகத்தில் தேமுதிக!

தேமுதிக சார்பாக இன்று காலை தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விஜயகாந்த் தலைமையில் தேமுதிக முக்கிய ஆலோசனை கூட்டம்- வீடியோ

    சென்னை: தேமுதிக சார்பாக தற்போது விஜயகாந்த் தலைமையில் தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

    தேமுதிக, இந்த ஒரு சொல்தான் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிகமாக உலவிக் கொண்டு இருக்கிறது. தேமுதிக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    உறுதியாகி உள்ளது

    உறுதியாகி உள்ளது

    அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. நேற்று துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்தார். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேர்வது உறுதி என்றே கூறுகிறார்கள்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இது தொடர்பாக அதிமுகவினர் கடந்த சில நாட்களாக தேமுதிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து தற்போது தேமுதிக சார்பாக தேமுதிக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த சந்திப்பை நடத்தியது. இதில் 60 முக்கிய உறுப்பினர்கள் வரை கலந்து கொண்டனர்.

    உற்சாகம்

    உற்சாகம்

    இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதில் பெரும்பாலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார். அதன்பின் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களிடம் பேசினார். தேமுதிக மீண்டும் இப்படி கட்சி கூட்டங்களை நடத்துவது, தொண்டர்களிடம் பேசுவது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+