சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணியில் இழுபறி.. விஜயகாந்த்துக்கு வந்த கோபம்.. அதிரடி முடிவெடுத்த தேமுதிக.. அடுத்து என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆலோசனைக்கு பின்னர் அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இது தொடா்பாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிப்பிர்ல தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ப்ரீபோல் சர்வேயிலும் மக்கள் நீதி மய்யம் அசத்தல்.. 5 பேர் சட்டசபைக்கு போவாங்களாமே.. அதில் கமல் உண்டா?ப்ரீபோல் சர்வேயிலும் மக்கள் நீதி மய்யம் அசத்தல்.. 5 பேர் சட்டசபைக்கு போவாங்களாமே.. அதில் கமல் உண்டா?

சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலாளா்கள் அனைவரும தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

எந்த முடிவும் இல்லை

எந்த முடிவும் இல்லை

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கூட்டணியை உறுதி செய்ய இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஆனால் கூட்டணியை உறுதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் தேமுதிக எடுக்கவில்லை. தேமுதிக தரப்பில் 23 தொகுதிகள் வரையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கேட்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

ஆனால் அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால், முன்னேற்றமே இல்லாமல் தொடா்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அதிமுக திட்டவட்டம்

அதிமுக திட்டவட்டம்

ஆனாலும் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. அதிமுகவை பொறுத்தவரை தேமுதிகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்துவிட்டது. தேமுதிகவிற்கு தொகுதிகள் ஒதுக்கினால் தான் யாருக்கு எந்த தொகுதி என்று பிரிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க முதல்வர் திட்டவட்டமாக மறுத்தார்.

தொகுதி பங்கீடு பாதிப்பு

தொகுதி பங்கீடு பாதிப்பு

இதையடுத்து தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

English summary
DMDK District Secretaries' emergency consultation meeting is scheduled to be held today. It will be held at the party office in KOYAMBEDU at 10.30 am today. A decision is to be taken after consulting the district secretaries about joining the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X