ஜன.24 ஆம் தேதி விஜயகாந்த் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்! தேமுதிக தொண்டர்களுக்கு அழைப்பு!
சென்னை: ஜன.24 ஆம் தேதி அன்று விஜயகாந்த் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைந்து 20 நாட்களை கடந்தும் அவரது நினைவிடத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. மறைந்தும் மிளிரும் சுடரைப் போல் மறைந்தும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் விஜயகாந்த். சுற்றுலா தலத்துக்கு செல்வதை போல், மக்கள் சாரை சாரையாக தினமும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு;
''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் அவர்கள் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்படி பார்த்தால் இந்த அறிவிப்பை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ தேமுதிக தலைமைக்கழகம் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட வைத்திருக்கிறார். விஜயகாந்த் மறைவுக்கு பிறகு அவருக்காக நடத்தப்படும் முதல் நிகழ்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிரேமலதா புரிந்துக் கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது.
விஜயகாந்தை பொறுத்தவரை அவர் மறைந்துவிட்டாலும் தேமுதிகவுக்கு புத்துயிர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். மனச்சோர்வில் இருந்த தொண்டர்கள் எல்லாம் இப்போது பழைய படி ஆக்டிவாக கட்சிப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications