விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் முதன்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோன்று முதல் முறையாக பிரேமலதா விஜயகாந்தும் தேர்தலில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டமன்ற தொகுதிகளும் 1 ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடுவதற்கு 25 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலையும் தேமுதிக கொடுத்துள்ளது.

DMDK Joins DMK Alliance for First Time Premalatha Vijayakanth Likely to Make Electoral Debut

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 6 பேர் கொண்ட குழுவை சுதீஷ் தலைமையில் பிரேமலதா அறிவித்து இருக்கிறார். இந்தக் குழு இன்று அண்ணா அறிவாலயம் சென்று ஆலோசனை மேற்கொண்டது. விருகம்பாக்கம், ரிஷிவந்தியம், விருதுநகர், சாத்தூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சேலம் மேற்கு, ஆம்பூர் உள்ளிட்ட 25 தொகுதிகளை தேமுதிக தனது விருப்பப் பட்டியலாக திமுகவிடம் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல் முறையாக களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரேமலதாவை பொறுத்தவரை விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டனியில் தொகுதி ஒதுக்கப்படும் போது விருத்தாச்சலம் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டால் பிரேமலதா களம் இறங்குவார் என்று முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

முதல் முறையாக களம் இறங்கும் பிரேமலதா

இதனால், விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விருதாசலம் தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா களமிறங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளுமே அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. இதில் அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவே வெற்றி பெற்றது. 2016-ல் அதிமுகவும் 2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.

விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம்

2011 சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்றார். 2016 மற்றும் 2021 தேர்தலில் இங்கு திமுக வெற்றி பெற்றது. விஜயகாந்த் வென்ற தொகுதி என்பதால் செண்டிமெண்ட் ஆக இந்த இரண்டில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என பிரேமலதா முடிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக தொகுதியை ஒதுக்கிய பிறகு இது குறித்து பிரேமலதா முடிவு செய்ய உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+