விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளார்.. யாரும் வதந்திகளை பரப்பவோ.. நம்பவோ வேண்டாம்.. பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக உள்ளதாகவும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என்று அவரது மனைவி பிரேமலதா வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொள்கிறது என மியாட் மருத்துவமனை கூறியிருந்தது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நலமுடன் இருக்கிறார்: இதனால், ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். இந்த நிலையில், விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் வெகு விரைவில் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
வீடியோவில் கூறியிருந்தேன்: அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இரண்டு தினங்களுக்கு முன்பாக நான் வெளியிட்ட வீடியோவில் கூறியிருந்தேன். ஆனாலும் தொடர்ந்து டிரக்கியாஸ்டமி செய்யப்பட்டு இருப்பதாகவும் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் முதல்வர் வந்து விஜயகாந்தை சந்தித்து எனக்கு ஆறுதல் கூறியது போலவும் தொடர்ந்து அனைத்தும் பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்களிலும் சேனல்களில் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
இது ஒட்டுமொத்தமாக தொண்டர்களையும் நிர்வாகிகளை, திரையுலகினரை எங்கள் குடும்பத்தினரை மிகப்பெரும் மன உளைச்சலுக்கு இந்த பொய் செய்திகள், வதந்தி செய்திகள் கொண்டு செல்கிறது. விஜயகாந்த் உடனேயே இருக்கிறோம். மருத்துவமனையில் எந்த வித பரபரப்பும் இன்றி அமைதியாக நல்ல படியாக விஜயகாந்த் இருக்கிறார். இந்த பரபரப்புகள் வதந்திகள் அனைத்துமே வெளியேதான் உலவிக்கொண்டு இருக்கிறது.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
பொய் செய்திகளை பரப்பாதீங்க: தயவு செய்து மனித நேயத்தோடு, வதந்திகளை பரப்புவதை யாராக இருந்தாலும் தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்..விஜயகாந்த் நலமாக இருக்கிறார். இன்னும் 2 நாளில் நல்ல செய்தி வரும் வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
எனவே யாரும் வீண் வதந்திகளை, பரபரப்புக்களை நம்ப வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நானும் எனது 2 மகன் சண்முகப்பாண்டியனும் விஜயகாந்தை சந்தித்த புகைப்படத்தைக் கூட போட்டு இருக்கிறேன்.. யாருமே வதந்திகளை பொய் செய்திகளை பரப்பாதீங்க.. நம்ப வேண்டாம் என்பதை மீண்டும் உங்கள் அனைவரையும் பார்த்து கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications