வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எளிமையாக பழகுவார்.. விஜயகாந்த் பள்ளி தோழர் உருக்கம்
சென்னை: பணக்கார வீட்டு பிள்ளை என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகுவார். ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் எதுவும் இன்றி என்னிடமும் பழகினார் என்று பள்ளி ஹாஸ்டலில் விஜயகாந்துடன் தங்கி படித்த நண்பர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். விஜயகாந்த் மரண செய்தியை அறிந்து அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறினர். மியாட் மருத்துவமனையில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட விஜயகாந்த் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் சாரை சாரையாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தற்போது சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடல் கொண்டு வரப்படுவது அறிந்து முன்கூட்டியே அவரது ரசிகர்கள் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். தற்போது விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் நற்பண்புகள் குறித்தும் உதவி மனப்பான்மை பற்றியும் அவருடன் பழகியவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜயகாந்த் உடன் பள்ளியில் படித்த தோழர் பாலசுப்பிரமனியம் என்ற பாலு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்தார். இது பற்றிய விவரம் வருமாறு;- விஜயகாந்த் பள்ளி காலத்தில் சினிமா, அரசியலில் பெரிய ஆர்வம் காட்டாமல்தான் இருந்தார். பணக்கார வீட்டு பிள்ளை என்றாலும் எல்லோரிடமும் சகஜமாக பழகும்வார்.
ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் எதுவும் இன்றி என்னிடமும் பழகினார். பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்த விஜயகாந்துக்கு என்னுடைய வீட்டில் இருந்து அவருக்கு பிடித்தமான உணவுகளை கொண்டு வந்து கொடுப்பேன். விஜயகாந்த் வளர்ச்சி எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அவரது மறைவு செய்தி என்னை மிகவும் வேதனை அடைய வைத்துவிட்டது. எனது ஆருயிர் நண்பனை இழந்து விட்டேன்" என்றார்.
விஜயகாந்த் 1966 முதல் 1968 - ம் கல்வி ஆண்டு வரை 9, 10-ம் வகுப்புகளில் விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை பள்ளியில் விடுதியில் தங்கி படித்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜயகாந்துடன் நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் டாணா பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உள்பட சுமார் 5 நண்பர்கள் பள்ளி வகுப்பறையில் ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications