“தவம்” கிடக்கும் தொண்டர்கள்.. வெளியே வருகிறார் விஜயகாந்த் -புத்தாண்டில் வாங்க! மக்களை அழைத்த தேமுதிக
சென்னை: தேமுதிக தலைவர், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பல மாதங்களாக வெளியில் வந்து தொண்டர்களை சந்திக்காமல் இருந்து வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் தொண்டர்களை சந்திப்பார் என்று அக்கட்சி அறிவித்து உள்ளது. பல மாதங்களாக விஜயகாந்தை வெளியில் சந்திக்க முடியாமல் இருந்த அக்கட்சியின் தொண்டர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கோலோச்சியவர் விஜயகாந்த். 20ங்களின் தொடக்கம் வரை ஹிட் படங்களை ரசிகர்களுக்கு பரிசளித்து வந்த விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தன்னுடைய கட்சி இருக்கும் என்று அறிவித்து பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றியும் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

விஜயகாந்தின் அரசியல்
விஜயகாந்தின் எழுச்சிமிகு பேச்சு, சினிமாவில் அவருக்கு இருந்த ரசிகர் பலம் என அவருக்கு அரசியலில் அனைத்து கைகொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதில் திமுகவை வீழ்த்தி அதிமுக - தேமுதிக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்
அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற விஜயகாந்த், தமிழ்நாடு அரசியலில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அக்கட்சி போட்டியிட்டதால் விஜயகாந்திற்கு இருந்த மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியது.

பேச்சுத் திறன் பாதிப்பு
அடுத்து நடைபெற்ற 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கி தேமுதிக போட்டியிட்டது. ஆனால், அதிலும் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கவே தமிழ்நாடு அரசியலில் விஜயகாந்தின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. மறுபக்கம் விஜயகாந்தின் உடல் நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு இயல்பாக பேசும் நிலையை இழந்தார் அவர்.

விரல் அகற்றம்
அதை தொடர்ந்து நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல்களிலும் விஜயகாந்தை அதிகம் பார்க்க முடியவில்லை. அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதால் அவர் வீட்டிலேயே முடங்கினார். அவரது மனைவி மற்றும் மகன் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் நீரிழிவு நோய் அதிகரித்ததால் அவரது கால் விரல் அகற்றப்பட்டன.

புத்தாண்டை முன்னிட்டு அறிக்கை
அதேபோல் விஜயகாந்த் உடல் மெலிந்த நிலையில் இருந்த புகைப்படமும் வெளியாகி மக்களை கவலையடைய செய்தது. தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் அவரை நேரில் காண தவம் கிடந்தன. இந்த நிலையில்தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

மக்களை சந்திக்கிறார் விஜயகாந்த்
தேமுதிக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கழகத்தினரையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம்
அதன்படி வரும் புத்தாண்டு தினத்தில் (01.01.2023) சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வருகை தரவுள்ளார். காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கேப்டனை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம். கழகத்தை சேர்ந்த அனைவரும், பொதுமக்களும் நேரில் வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications