திடீர்னு "மிரட்டிய" விஜயகாந்த்.. அதிலும் அந்த "கருணாநிதியை".. அப்படியே அதிர்ந்த கூட்டம்.. என்னாச்சு?
விஜயகாந்த் நேற்று எழும்பூரில் பிரச்சாரம் செய்தார்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் 2வது நாளாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. இதனால் அவரது தொண்டர்கள் படுகுஷியாகி உள்ளனர்.
விஜயகாந்த் இல்லாமல் எந்த தேர்தலையும் தேமுதிக சந்திக்கும் நிலையில் இல்லை.. அவரால் பேச முடியாவிட்டாலும், பிரச்சார வேனில் உட்கார வைத்தோ, நிற்க வைத்தோ வெளியே அழைத்துவர வேண்டி உள்ளது.
அவரால் சரளமாக பேசமுடியாத நிலை இருந்தாலும், முகத்தை பார்ப்பதற்காகவே பலரும் திரண்டு வருகின்றனர்.. உண்மையை சொல்ல போனால், விஜயகாந்த்துக்கு இந்த கூட்டணி சுத்தமாக பிடிக்கவில்லை என்று தகவல் கசிந்தது..

கூட்டணி
பாஜகவுடனேயே கூட்டணி தொடர வேண்டும், அவர்கள்தான் அப்போதிருந்து நமக்காக உதவியவர்கள், கூட்டணியை விட்டு போய்விடக்கூடாது என்று 6 மாசத்துக்கு முன்பே விஜயகாந்த் குடும்பத்தாரிடம் சொன்னாராம். அதனால்தான் பிரேமலதாவும் பலமுறை அதிமுக கூட்டணிக்காகவே காத்து கிடந்தார்.. வேறு வழியில்லாமல்தான் அமமுகவுடன் இணைந்துள்ளார் என்பது வேறு விஷயம்.

விஜயகாந்த்
இருந்தாலும், தன்னை நம்பி உள்ள தொண்டர்களுக்காக விஜயகாந்த் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளார்.. ஆனால், மவுன பிரச்சாரம்.. அவரால் பேச முடியவில்லை.. கைகளை மட்டும் அசைத்து கொண்டு போகிறார்.. அவரை பார்த்து மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.. முதல்நாள் கும்மிடிப்பூண்டி பஸ் ஸ்டாண்டில் பிரச்சாரத்துக்கு வந்தார்.. நேற்று எழும்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

உற்சாகம்
முதல்நாளில் தொண்டர்கள் கேப்டன், கேப்டன் என்று கோஷமிட்டும், அவர்களை நோக்கி கையை மட்டுமே அசைக்க முடிந்தது.. இதனால், தொண்டர்கள் கொஞ்சம் சோர்ந்து போய்விட்டனர்.. அதனால், நேற்றைய தினம் அவர்களை உற்சாகப்படுத்த, தேமுதிக தரப்பு வேறு ஒரு ஐடியா செய்தது.. ஏற்கனவே விஜயகாந்த் பிரச்சாரம் செய்த ஆடியோ பேச்சை ஒலிபரப்பியது..

ஆடியோ
கூட்டத்தில் திடீரென விஜயகாந்த்தின் முழக்கம் கேட்டதும் மக்கள் ஒரு கணம் ஷாக் ஆனார்கள்.. பிறகுதான் அது விஜயகாந்த்தின் பழைய ஆடியோ என்று தெரியவந்தது. இதை கேட்டதும் ஓரளவு அவர்கள் தெம்பானார்கள்.. விஜயகாந்த் மிரட்டலுடன் பேசும் பேச்சை கேட்டு கைகளையும் தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

கருணாநிதி
இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், "திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடியுங்கள்" என்ற சத்தமும் அதே ஆடியோவில் இருந்து கேட்டது.. இதை கேட்டதும் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது... ஆனால் விஜயகாந்த்தோ, கை அசைத்தும், கட்டை விரலை காட்டியும் அவர் பாட்டுக்கு மக்களை பார்த்து அதே வெகுளித்தனத்துடன் சிரித்து கொண்டே நகர்ந்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications