கூட்டணியை அமைக்க வந்துட்டோம்ல… லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்த தேமுதிக
Recommended Video

சென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த தேமுதிக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் களத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. அதிமுக யாரோடு என்று இதுவரை தெரியாத நிலை உள்ளது. கருத்துக் கணிப்புகளும் பாதகமாக உள்ளதால் அதிமுக முகாம் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுக முகாமோ.. கருத்துக்கணிப்புகள் குறித்து உற்சாகம் அடைந்து.. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் கால் பதித்துள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே திமுக பக்கம் தான் உள்ளது. மதிமுகவும் சாதகமான தொகுதிகளை பெற்றுவிடலாம் என்ற கணக்கீட்டில் உள்ளது.
பாமகவின் டாக்டர் ராமதாசோ... கூட்டணி அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டு உள்ளதாக அறிவித்தும் விட்டார். இந் நிலையில் பலரும் மறந்து போயிருந்த தேமுதிக தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவை அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.
குழுவில், தே.மு.தி.க. அவைத் தலைவர் வி. இளங்கோவன், கொள்கை பரப்புச்செயலாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், துணைச் செயலாளர்களான ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று விஜய காந்த் அறிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் தேமுதிகவும் கூட்டணியுடன் களமிறங்க முடிவு செய்துள்ளதை இந்த அறிவிப்பு தெளிவுப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications