என்னங்க இது? அந்த ஈரம் கூட இன்னும் காயலையே.. பிரேமலதா எடுத்த 2 முடிவு.. கொந்தளிக்கும் மக்கள்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எடுத்த இரண்டு முடிவுகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மரணத்தை தொடர்ந்து அவரின் மனைவி பிரேமலதா தேமுதிகவை பொதுச்செயலாளராக வழி நடத்தி வருகிறார். இந்த நிலையில் திமுகவை கண்டித்து ஜன.20ல் தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

திமுகவை அழிக்கவே விஜயகாந்த் கட்சி தொடங்கினார். விஜயகாந்த்தின் மக்கள் பணிகளை அழிக்கத் துடிக்கும் திமுகவினர் மற்றும் அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து ஜன.20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதும் 15 நாள் கழித்து நன்றி சொல்லுது.
— பரம்பொருள் (@paramporul) January 12, 2024
தமிழக அரசுக்கோ, முதல்வருக்கோ நன்றி சொல்லி ஒரு அறிக்கையோ, ட்வீட்டோ கூட இல்ல. இதுதான் பிரேமலதா. https://t.co/pL7nRHYgHu
இரண்டாவது முடிவு: அதுபோல் விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கு மாற்றப்பட்டு உள்ளது. அவரின் மனைவி பிரேமலதா பெயருக்கு அந்த கணக்கு மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.
அந்த கணக்கிற்கு 2 லட்சத்து 33 ஆயிரத்திற்கு 750 பின்தொடர்பாளர்கள் இருந்தனர். இப்போது அந்த கணக்கை அவரின் மனைவி பயன்படுத்தி வருகிறார். பிரேமலதா என்ற பெயரில் கணக்கை மாற்றி பயன்படுத்தி வருகிறார்.
விமர்சனம்: அவரின் இந்த இரண்டு முடிவுகளும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விஜயகாந்த் இறந்த போது இறுதி ஊர்வல செலவு, அரசு மரியாதை என்று ஆளும் அரசு மிக சிறப்பாக கையாண்டது. அரசியல் நாகரீகத்தோடு அந்த நிகழ்வை மேற்கொண்டது. ஆனால் அந்த சம்பவத்தின் ஈரம் காயும் முன் இப்படி ஒரு போராட்டம் அவசியமா?
திருமதி பிரேமலதா விஜயகாந்த் இதை தவிர்த்திருக்கலாம்
— Jayachandran Dhamodharan (@Jayachandran_DJ) January 12, 2024
முன்னாள் முதல்வர் கலைஞரின் டிவிட்டர் கணக்கு இன்னமும் அவர் பெயரிலேயே இருப்பதை போல் கேப்டனின் டிவிட்டர் கணக்கும் அப்படியே இருந்திருக்கலாம்
உடலநலன் பாதிக்கப்பட்ட கேப்டனை பொதுகுழுவுக்கு அழைத்து வந்தது, இறுதி நிகழ்வின் போது pic.twitter.com/5wmfu67bMy
விஜயகாந்த்தின் மக்கள் பணிகளை அழிக்கத் துடிக்கும் திமுகவினர் மற்றும் அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளை கண்டித்து என்றால் என்ன அர்த்தம். விஜயகாந்த்தின் மக்கள் பணிகளை எதை திமுக அழித்தது. இதற்கு ஏன் இப்போது சம்பந்தமே இல்லாமல் போராட்டம். தமிழக அரசுக்கோ, முதல்வருக்கோ நன்றி சொல்லி ஒரு அறிக்கையோ, ட்வீட்டோ கூட இல்ல. ஆனால் டெல்லி தலைவர்களுக்கு மட்டும் நன்றி ஏன் ? இதுதான் பிரேமலதா என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றனர்.
கணக்கு: அதேபோல் யாருடைய முடிவின் பெயரில் விஜயகாந்த் கணக்கு மாற்றப்பட்டது என்று விவரம் வெளியாகவில்லை.
அதே சமயம் அவர் மரணித்து கிட்டத்தட்ட 2 வாரங்களில் இப்படி சமூக வலைதள கணக்கு நீக்கப்பட்டு வேறு பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள் இடையே, விஜயகாந்த் அனுதாபிகள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஏன் இப்படி விஜயகாந்த் கணக்கை கூட விட்டுவைக்காமல் இருக்கிறீர்கள், என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திமுகவை அழிக்கவே கட்சி தொடங்கினார் கேப்டன் - பிரேமலதா
— அதிபன் (@athipann) January 12, 2024
திமுக தான் கடைசியாக அரசு மரியாதையுடன் கேப்டனை அடக்கம் செய்தது. pic.twitter.com/mg1OfjIANw
பிரேமலதா விஜயகாந்த் இதை தவிர்த்திருக்கலாம் முன்னாள் முதல்வர் கலைஞரின் டிவிட்டர் கணக்கு இன்னமும் அவர் பெயரிலேயே இருப்பதை போல் கேப்டனின் டிவிட்டர் கணக்கும் அப்படியே இருந்திருக்கலாம் உடல்நலன் பாதிக்கப்பட்ட கேப்டனை பொதுகுழுவுக்கு அழைத்து வந்தது, இறுதி நிகழ்வின் போது தேர்தல் வெற்றிக்கு சபதம் போட்டது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதில் அவர் கவனம் செலுத்தலாம்
அதை விடுத்து தவறான வழிகாட்டுதல் காரணமாக இது போன்ற நகர்வுகளை மேற்கொள்வது கேப்டன் ரசிகர்களைக்கூட முகம் சுளிக்க வைத்துவிடும் என்று விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications