Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் விசிக தேமுதிக இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக திருமாவளவனிடம் மனம் விட்டு பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு விளக்கமளித்துள்ளார்.

கடலூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு கேட்டார். திருமாவளவன் மற்ற வேட்பாளர்கள் பெயரை சொன்னபோது எழுந்து நின்றனர். ஆனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எழுந்து நிற்கவில்லை. திருமாவளவன் சொல்லும்போது நிற்காத பிரேமலதா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லும்போது எழுந்து நின்றார்.

Premalatha DMDK Thirumavalavan

மனம் விட்டு பேசினோம்

இது விசிகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரேமலதாவுக்கு எதிராக விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிரேமலதா, "அது ஒரு பொதுக்கூட்டம். இந்த கூட்டணியின் தலைமை யார். ஸ்டாலின் தானே. ஸ்டாலின், திருமாவளவன் இருவரும் என் அருகில் தான் அமர்ந்திருந்தனர். கூட்டணியின் தலைமையில் இருப்போர் தான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார்கள்.

இது எல்லோருக்கும் தெரியும். திருமா அண்ணன் அவர்களின் வேட்பாளர்களை மட்டும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்காது என்பதால், என் பெயரையும் சொல்வதாக கூறினார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் எல்லாமே நெகடிவாக தெரியும். இதை தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்கள். நானும் திருமாவளவனும் நேற்று போனில் மனது விட்டு பேசினோம்.

வெளியில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்

நான் தான் தவறு செய்துவிட்டேன். அண்ணன் ஸ்டாலின் தான் உங்களை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று திருமாவே சொன்னார். இதை சிலர் திசை திருப்புகிறார்கள். அவருக்கும், கேப்டனுக்குமான நட்பு பற்றி எனக்கு தெரியும். வெளிச்சம் டிவி தொடங்கியபோது அதை ஆரம்பித்து வைத்தவர் கேப்டன்.

நாட்டில் நடக்கும் அவலங்களை நீங்க வெளிச்சம் போட்டு காட்டணும் திருமா என்று கேப்டன் அவரை ஆரத்தழுவி வாழ்த்தினார். மக்கள் நலக் கூட்டணியில் எங்களுடன் சகோதரராக பழகியுள்ளார். எங்கள் வீட்டிற்கு வந்தால் சாப்பிடாமல் செல்ல மாட்டார். இது எல்லாம் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியுமா. எங்களுக்கு நல்ல நட்பு இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

நிறுத்திக்கோங்க

நான் சாதாரணமாக இருந்ததையும், சிரித்தால் தப்பு, கைவைத்தால் தப்பு என்கிறார்கள். எனக்கு புரியவில்லை. ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு, கஞ்சா வழக்கு போன்று தேமுதிக மீது எதையும் சொல்ல முடியாது. தேமுதிக நேர்மையான கட்சியாக இருப்பதால் சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். திருமாவளவன் எனக்காக விருதாசலத்தில் பிரச்சாரம் செய்கிறார். விசிக வேட்பாளர்களுக்காக நான் பிரச்சாரம் செய்யவுள்ளேன். இதோடு தவறாக போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+