சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் அதிர்ச்சியில் தேமுதிக.. கோபம் காட்டிய அதிமுக தலைகள்.. அட இதுதான் காரணமா!

தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முடிவெடுத்த விஜயகாந்த்... கூட்டணி அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில்

    சென்னை: தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்றும் வெளியிடவில்லை. தேமுதிக கேட்ட சில முக்கிய தொகுதிகள் அதிமுக கொடுக்காதது இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது.

    தேமுதிக எந்த கூட்டணியில் இணைய போகிறது, லோக்சபா தேர்தலில் எப்படி போட்டியிட போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக இத்தனை நாட்கள் இருந்தது.

    தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதலில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தியது.

    அதன்பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் மூன்றாம் அணி அமைக்கும் திட்டத்திலும் தேமுதிக இருந்தது.

    மூன்றே வருஷம்.. முக்கால்வாசி மக்கள் நல கூட்டணி திமுகவுடன் ஐக்கியம்! மாற்று அரசியல் கோஷம் மாயம் மூன்றே வருஷம்.. முக்கால்வாசி மக்கள் நல கூட்டணி திமுகவுடன் ஐக்கியம்! மாற்று அரசியல் கோஷம் மாயம்

    ஏற்படவில்லை

    ஏற்படவில்லை

    ஆனால் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இதையடுத்து தேமுதிக மீண்டும் அதிமுக பக்கம் சென்றது. அதிமுக உடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

    ஆலோசனை

    ஆலோசனை

    அதிமுகவுடன் கடந்த 5 நாட்களில் மட்டும் 6 முறைக்கும் மேல் தேமுதிக தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் அப்போது எல்லாம் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு இடையில் தற்போது தேமுதிக அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பொருளாளர் பிரேமலதா ஆகியோர் ஆலோசனை செய்தனர்.

    என்ன கேட்டனர்

    என்ன கேட்டனர்

    கூட்டணி குறித்து இதில் இவர்கள் ஆலோசித்த பின் அதிமுக தலைகளிடம் பேசி இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களிடம் இவர் 7 தொகுதியில் இருந்து 5 தொகுதிக்கு குறைந்து வந்து இருக்கிறார்கள். அதன்பின் 4 தொகுதிகள் வரை கூட இவர்கள் குறைந்து வந்து இருக்கிறார்கள்.

    ஆனாலும் நிறைவேறவில்லை

    ஆனாலும் நிறைவேறவில்லை

    ஆனாலும் இந்த கூட்டணி ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இதற்கு பின் பல முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

    1. அதிமுக 4 தொகுதிகளில் 2 தலித் தொகுதிகளை தருவதாக கூறியுள்ளது.

    2. தேமுதிக வட மாவட்டங்களை கேட்டு இருக்கிறது.

    3. அதிமுக ஒரு வடமாவட்டம் கூட கொடுக்க முடியாது என்றுள்ளது.

    4. தேமுதிக தேர்தல் செலவிற்கு பணம் கேட்டுள்ளது.

    5. தேமுதிகவின் எந்த விதமான செலவையும் ஏற்க முடியாது என்று அதிமுக கூறியுள்ளது.

    6. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க தேமுதிக மறுத்துவிட்டது, இந்த ஆறு காரணங்கள்தான் இந்த கூட்டணி உருவாகாமல் போக காரணம் என்கிறார்கள்.

    English summary
    DMDK will announce in Lok Sabha poll alliance in few minutes in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X