அனைத்து கட்சிகளும் பேசுறாங்க.. ஆனால்.. தேமுதிக கூட்டணி குறித்து மீண்டும் குழப்பியடிக்கும் பிரேமலதா
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக, அதிமுகவில் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் தான் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளனர்.

தேமுதிக கூட்டணி
தேமுதிக தரப்பில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அவர்களின் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பதாக கூறினார்கள். ஆனால் அதில் கூட்டணியை அறிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக 2 கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அமமுக இணைந்தபோதே தேமுதிகவும் அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக கூறப்பட்டது. இருப்பினும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தங்களுடன் பேசவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
திமுக, அதிமுக 2 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிக சுமார் 20 தொகுதிகள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது. கேப்டனின் ரத யாத்திரை என்கிற பெயரில் பிரேமலதா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் கடந்த வாரம் நிறைவடைந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கும் என்று பிரேமலதா கூறியிருந்தார்.
பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் முடிவு
ஆனாலும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக சார்பில் தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் நிகழ்வு, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் இன்று தொடங்கியுள்ளது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, "பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் தேமுதிக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவோம்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்வோம். பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரபூர்வமாக அறிவிப்போம். தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து தேமுதிக வெற்றி பெறும். எங்களுக்கு எல்லாரும் தோழமை கட்சிகள் தான். எல்லோருடனும் நட்பாக பேசுகிறோம். அதை இல்லை என்று சொல்ல முடியாது.
எங்கள் நலனும்
கூட்டணிக்கு ஒரே பார்முலா தான். எங்களுக்கு மட்டும் தனியாக இல்லை. தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக, தவெக, நாம் தமிழர் எல்லோருடனும் நட்பாக இருக்கிறோம். எங்கள் நலனையும் யோசித்து கூட்டணி பற்றிய அறிவிப்பு இருக்கும்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications