டீம் கனிமொழி டூர்.. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு இன்று முதல் பயணம்! தூத்துக்குடியில் ஸ்டார்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்குகிறது.

2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கும் சூழலில் திமுகவின் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. ஒரு பக்கம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கும் நிலையில், இன்று முதல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ்நாடு முழுவதும் பயணத்தை தொடங்குகிறது. தி.மு.க துணைப் பொதுச் செய­லா­ள­ரும், தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்பின­ரு­மான கனி­மொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

DMK 2024 loksabha election manifesto preparation committee start a tour from Tuticorin today

திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்­கோ­வன், தமிழ்நாடு தக­வல் தொழில் நுட்பத்துறை அமைச்­சர் பி.டி.ஆர். பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்.ஏக்கள்., கோ.வி.செழியன், சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன், எழி­லன், எம்பிக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்­கு­மார், எம்.எம்.அப்­துல்லா, சென்னை மேயர் பிரியா இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு இன்று தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கி சென்னையில் பிப்ரவரி 23 ஆம் தேதி நிறைவு செய்கிறது.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற இருக்கும் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொது நல­னில் அக்­கறை கொண்ட பல்­வேறு தரப்­பட்ட தொழில் முனை­வோர்­கள், வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் கலந்து கொள்ள மாவட்­டச் செய­லா­ளர்­களும் அமைச்சர்களுமான கீதா­ ஜீ­வன் மற்றும் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் ஆகியோர் கூட்­டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அதில், "2024 -ல் நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­காக தி.மு.க. சார்­பில் தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு அமைக்­கப்­பட்­டு உள்ளது. இக்­கு­ழு­வின் தலை­வ­ராக தி.மு.கழக துணைப் பொதுச் செய­லா­ள­ரும், தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்­கள். குழு­வின் உறுப்­பி­னர்­க­ளாக டி.கே.எஸ்.இளங்­கோ­வன், தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் பி.டி.ஆர்.பழ­னி­வேல் தியா­க­ரா­ஜன், தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.இராஜா, கோ.வி.செழி­யன்.எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழி­ல­ர­சன்.எம்.எல்.ஏ., கே.ஆர்.என்.ராஜேஸ்­கு­மார்.எம்.பி., எம்.எம்.அப்­துல்லா.எம்.பி., திரு­மதி.பிரியா டாக்­டர்.எழி­லன் நாக­நா­தன்.எம்.எல்.ஏ., சென்னை மேயர் ஆகி­யோர் உள்­ள­னர்.

இந்த தேர்­தல் அறிக்கை தயா­ரிக்­கும் குழு­வி­னர் தமிழ்­நாட்­டின் ஒவ்­வொரு பகு­திக்­கும் நேரில் சென்று பல்­வேறு தரப்­பட்ட மக்­களை சந்­தித்து தேர்­தல் அறிக்­கை­யில் இடம்­பெற வேண்­டிய திட்­டங்­கள் குறித்து கோரிக்கை மனுக்­களை பெற உள்ளனர். அதன்­படி தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­திக்கு இன்று (05.02.2024 - திங்­கள் கிழமை) காலை 10.00 மணி அள­வில் தூத்­துக்­குடி - திருச்­செந்­தூர் சாலை, காம­ராஜ் கல்­லூரி எதி­ரில் உள்ள மாணிக்­கம் மஹா­லில் கோரிக்கை மனுக்­களை பெற இருக்­கி­றார்­கள்.

இந்­நி­கழ்ச்­சி­யில் தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற தொகு­தி­யின் வளர்ச்­சி­யில் அக்­கறை கொண்ட பல்­வேறு தரப்­பட்ட தொழில் முனை­வோர்­கள், வர்த்­த­கர்­கள், வியா­பா­ரி­கள், விவ­சா­யி­கள், மருத்­து­வர்­கள், மீன­வர்­கள், மாண­வர் சங்­கங்­கள், தொழி­லா­ளர் நல பிர­தி­நி­தி­கள், சமூக ஆர்­வ­லர்­கள், பொது­மக்­கள் அனை­வ­ரும் இத­னையே அழைப்­பாக ஏற்று தவ­றாது கலந்து கொள்ள அன்­பு­டன் அழைக்­கி­றோம். வருகை தரும் அனை­வ­ரும் தங்­கள் கருத்­துக்­களை மனு­வாக எழு­திக் கொண்டு வர­வும் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+