"டைம் எடுத்துக்கங்க.. எல்லோரையும் கூப்பிடுங்க.. கோட்டைக்கு வாங்க".. எடப்பாடியாருக்கு.. ஆ. ராசா சவால்

முதல்வருக்கு திமுகவின் ஆ.ராசா பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கோட்டைக்கு கூப்பிடுங்க எல்லாரையும்.. 3 நாளோ அல்லது ஒரு வாரமோ டைம் எடுத்துக்கங்க.. எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த தயாரா?" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவின் ஆ.ராசா நேரடி சவால் விடுத்துள்ளார்.

நேற்றில் இருந்து சோஷியல் மீடியா முழுவதும் திமுகவின் ஆ. ராசா பேசிய பேச்சுதான் வைரலாகி வருகிறது.. முதல்வருக்கு இதுவரை யாருமே விடுக்காத வகையில் நேரடியான ஒரு சவாலை விடுத்துள்ளார். இந்த சவாலை கண்டு அதிமுக தொண்டர்கள் ஒரு பக்கம் மிரண்டு போயுள்ளனர்.. திமுக தொண்டர்கள் மற்றொரு பக்கம் தெம்பாகி உள்ளனர்.

நடந்தது இதுதான்.. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் திமுகவை சரமாரியாக விமர்சித்திருந்தார்.. "எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தினமும் அறிக்கை விடுகிறார்... அவருக்கு அறிக்கை நாயகன் என்றே பெயர் சூட்டலாம். மக்களைப் பார்த்து மனு வாங்காமல், நான்கைந்து மாசமாக வீட்டிலேயே இருந்துகொண்டு இந்த ஆட்சியில் ஊழல் நடப்பதாக பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

2 ஜி ஊழல் மிகப் பெரிய ஊழல்... தமிழ்நாட்டு பட்ஜெட் அளவுக்கு பெரிய ஊழல். 1.76 ஆயிரம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்த கட்சி திமுக... அவர்கள் மத்திய ஆட்சியில் இடம்பெற்றபோது 1.76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார்கள்.. இது தவிர கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் பணம் கைமாறியது. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். அவரே மாட்டப்போகிறார்" என்று விரிவான குற்றச்சாட்டையே முன்வைத்திருந்தார்.

 ஆ.ராசா

ஆ.ராசா

இதற்குதான், திமுக துணைபொதுச்செயலாளர் ஆ.ராசா, பதிலடி தந்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உங்கள் அமைச்சரவையில் இருக்கிற எல்லாரையும் கூப்பிடுங்க.. உங்கள் அட்வகேட் ஜெனரலை பக்கத்தில் வெச்சுக்குங்க.. எல்லாவற்றையும் நானும் எடுத்து வெச்சுக்கறேன்.. 3 நாளோ அல்லது ஒரு வாரமோ எடுத்துக்கங்க.. கோட்டைக்கு கூப்பிடுங்க.. எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த நான் தயார்.

 மனவலிமை

மனவலிமை

எந்த ஒரு குற்றச்சாட்டுகளிலும் திமுகவை சேர்ந்த தலைவர்கள் தண்டிக்கப்படவில்லை. முதல்வர் மூன்றாம் தரம் மனிதரை போல பேசுகிறார்.. நான் அந்த குற்றச்சாட்டுக்கு மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளபடியே ஆட்சி திறமையோ, நேர்மை தன்மையோ இருக்குமானால் 2ஜி உட்பட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது என்று சொல்வாரானால், சொல்வதற்கு மனவலிமை இருக்குமானால், இன்று அல்லது நாளை கோட்டையில் குறித்த நேரத்தில் ஆ.ராசா திமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியுடன் அனைத்து தொலைக்காட்சி முன்னிலையில் சர்காரியா, 2ஜி என்று குறிப்பிட்டு விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

கோட்டை

கோட்டை

அதிமுக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட கட்சி, அதிமுக ஊழல் கட்சியா? திமுக ஊழல் கட்சியா? என்பதை மனவலிமை இருந்தால் பகிரங்கமாக சவால் விடுகிறேன்.. கூப்பிடுங்க எல்லாரையும் கோட்டைக்கு" என்றார் ராசா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+