உள்ளாட்சி தேர்தல்.. விசிக வைத்த பெரிய கோரிக்கை.. உடனே ஏற்றுக்கொண்ட திமுக.. திருமா ஹாப்பி!
உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.
உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தது. ஆனால் திமுகவின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு இல்லை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிந்து தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளதால், திமுக தற்போது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்று திமுக ஆலோசித்து வருகிறது.

மேயர் பதவிகள்
மறைமுக தேர்தல் நடப்பதால் மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை நடந்து வருகிறது. அதேபோல் உள்ளாட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் தனியாக தேர்தல் நடக்கிறது. இதனால் மேயர் பதவிகள், கவுன்சிலர் பதவிகளை அளிப்பதில் பெரிய சிக்கல் நிலவி வருகிறது.

விசிக திமுக
இது தொடர்பாக தற்போது விசிக - திமுக ஆலோசனை நடத்தி வருகிறது,. இந்த ஆலோசனையில் மேயர் தேர்தல் நடந்தால் விசிக்காவிற்கு இரண்டு இடங்கள் அளிக்க வேண்டும் என்று திமுகவிடம் அதன் தலைவர் திருமாவளவன் கேட்டு இருக்கிறார். முக்கியமான இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கவுன்சிலர்
நகராட்சியில் முக்கியமான கவுன்சிலர் பதவிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். தனி தொகுதிகளில் அதிக அளவில் விசிகவை போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். விசிகவின் இந்த கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக எப்படி
இந்த சந்திப்பு தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றது. எங்களின் கோரிக்கையை திமுக ஏற்றுக்கொண்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications