மதிமுக + கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.. 6 தொகுதிகளுக்கு வெளியான லிஸ்ட்
சென்னை: திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுகவிற்கு 4 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 6 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வேட்பாளர்களின் விவரங்கள் வருமாறு:
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக மற்றும் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதிமுகவுக்கு 6 சட்டசபை தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக உள்பட பல கட்சிகள் கூடுதலாக சேர்ந்துள்ளன. இதனால் மதிமுகவிற்கு வழங்கப்பட்ட 6 சட்டசபை தொகுதிகள் 4 ஆக குறைக்கப்பட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்ட 3 தொகுதிகள் 2 ஆக குறைக்கப்பட்டது.
மதிமுகவிற்கு 4 தொகுதிகள்
அதன்படி மதிமுகவிற்கு திருப்பூர் மாவட்டம் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி (தனி) உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 3 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. இருப்பினும் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த சின்னம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மதிமுக வேட்பாளர்கள் யார் யார்?
இப்படியான சூழலில் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன்படி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக செந்தில் நாதன் களமிறங்குகிறார். மதுரை தெற்கு தொகுதியில் பூமி நாதன் போட்டியிடுகிறார். தற்போது இந்த தொகுதியில் பூமி நாதன் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் ராஜேந்திரனும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) தொகுதியில்செந்தில் செல்வன் என்பவரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் ஈஸ்வரன்
அதேபோல் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த கட்சிக்கு திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திருச்செங்கோட்டில் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் களமிறங்குகிறார். இவர் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுகிறார்.
பொள்ளாச்சியில் நித்தியானந்தன்
அதேபோல் பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நித்தியானந்தன் களமிறங்குகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர். தொழிலதிபரான இவர் கடந்த 20111ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு 2ம் இடம் பிடித்தார். அதன்பிறகு 2016 சட்டசப தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு 3ம் இடம் பிடித்தார். தற்போது வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications