அண்ணா அறிவாலயத்தில் உற்சாகம்.. வெற்றி பெற்ற எம்பிக்கள் முதல்வர் முக ஸ்டாலினிடம் வாழ்த்து
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல் முறையாக அண்ணா அறிவாலயத்திற்கு தி.மு.க. தலைவரும், முதல்வவருவான மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது அவருக்கு மேள-தாளம் முழங்கவும், பட்டாசுக்கள் வெடித்தும் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் பயணித்த கார் மீது திமுக மகளிரணியினர் பூக்களை தூவி வரவேற்றனர். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார் , அருண் நேரு உள்ளிட்ட 22 எம்பிக்களும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என 38 பேரும் வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர் .
அதேபோல திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் வெற்றிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உள்பட திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மகிழ்ச்சி பொங்க வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் வெற்றியால் அண்ணா அறிவாலயத்தில் திரண்டு இருந்த திமுகவினர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications