சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொங்குவிலும், சென்னையிலும் திமுக தான் மாஸ்.. மண்டல வாரியாக வெற்றி வாய்ப்பு நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டைம்ஸ் நவ்-சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், சென்னை, காவிரி டெல்டா பகுதிகள், வட தமிழகம், தென் தமிழகம் மட்டுமின்றி கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலததிலும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக-பாஜக கூட்டணி 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ஒரு அணியாகவும், திமுக, ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக அணியாகவும் ,. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கிறது.

அதிக வெற்றி

அதிக வெற்றி

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ், சி வோட்டருடன் இணைந்து கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அந்த கணிப்பில், திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணி இந்த முறை 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ், சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3 இடங்களிலும், டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

இந்நிலையில் மண்டல வாரியாக எந்த கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்பது குறித்தும் டைம்ஸ் நவ், சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட ஐந்து மண்டலங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

கோவை மண்டலம்

கோவை மண்டலம்

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்பட கொங்கு பகுதியில் அதிமுக அணி- 12 இடங்களிலும் வெல்லும் என்றும், திமுக அணி- 38 இடங்களிலும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அமமுக ஒரு இடங்களில் கூட வெல்ல வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிற கட்சிகள் இங்கு 2 இடங்களில் வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம்

மத்திய மண்டலம்

திருச்சி முதல் நாகை வரை உள்ள காவிரி டெல்டா பகுதிகளில் டைம்ஸ் நவ் சர்வேயின் படி அதிமுக அணி- 9 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது. திமுக அணி- 31 இடங்களில் வெல்லக்கூடுமாம். அமமுக ஒரு இடத்தில் வெற்றி பெறலாம் என்கிறது சர்வேயின் முடிவுகள். பிற கட்சிகள் வெல்ல வாய்ப்பு இல்லை.

சென்னையில் திமுக

சென்னையில் திமுக

சென்னையை பொறுத்தவரை அதிமுக கூட்டணி- 4 இடங்களிலும். திமுக கூட்டணி- 11 இடங்களிலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ், சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் ஒரு இடத்தில் வெல்லலாம் என்றும், அமமுக இங்கு வெல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக 42 இடங்கள்

திமுக 42 இடங்கள்

தென்மாவட்டங்களில் என்று பார்த்தால் திமுக கூட்டணி 42 இடங்களிலும், அதிமுக கூட்டணி 13 இடங்களிலும் அமமுக ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 37

திமுக கூட்டணி 37

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்பட வடமாவட்டங்களில் திமுக கூட்டணி 37 இடங்களிலும் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 7 இடங்களில் வெல்லும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.இதேபோல் புதுச்சேரியை ஒட்டிய கடலூர், விழுப்புரம் பகுதிகளில் 16 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

English summary
TIMES NOW-CVoter Opinion Poll: Alliance-wise seat share in Tamil Nadu : According to a Times Now-C voter poll, the DMK-Congress llaince won all zones of tamilnadu. dmk will won 38 seats in coimbatore zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X