ஆந்திரா ஜெகன் மோகன் ரெட்டியின் ‘வார்டு செயலகம்’ ஸ்டைல்- அதிரும் முதல்வர் ஸ்டாலின் செம்ம வியூகம்!
சென்னை: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வார்டு செயலகம் ஸ்டைலில் திமுக வாக்கு சாவடி பொறுப்பாளர்களை களமிறக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக வார்டு செயலகம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வார்டு செயலகம்: ஆந்திராவில் வார்டு செயலகத்துடன் இணைந்த வார்டு செயலகப் பொறுப்பாளர்களுகு 10 வீடுகள், 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான அரசு சார் உதவிகள், சான்றிதழ்கள், திட்ட உதவிகள் அனைத்தையும் கவனித்து உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் வார்டு செயலகத்தின் நோக்கம்.
ஜெகனுக்கு ஆதாயம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனின் இந்த வார்டு செயலகம் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களுடன் இணைந்து மக்களின் தேவைகளை ஆளும் அர்சாங்கம் பூர்த்தி செய்வதால் தேர்தல் பிரசார பணி எளிதாகும் என்பது ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகம்.
வாக்கு சாவடி பொறுப்பாளர்கள்: இதே அஸ்திரத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். காங்கேயம் அருகே இன்று மேற்கு மண்டல திமுக வாக்கு சாவடி முகவர்கள்/ பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.

அண்ணா மீது சத்தியம்: இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு வாக்கு சாவடி பொறுப்பாளரும் தங்களது வாக்கு சாவடிக்குட்பட்ட வீடுகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும்; பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதல், சான்றிதழ்கள் அனைத்தையும் உடனுக்குடன் பெற்றுத் தர வேண்டும். மக்களிடம் இருந்து இப்படி கோரிக்கைகளுடன் வரும் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மனுக்கள் மீது உடனக்குடன் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அப்படி செய்ய மறுக்கிற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மீது என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். வாக்கு சாவடி பொறுப்பாளர்களே! உங்களது கோரிக்கை சத்தியமாக நிறைவேறும்; அண்ணாவின் மீது சத்தியமாக நிறைவேறும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
தேர்தலில் தாக்கம்: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனின் வார்டு செயலகம் மாடலை தமிழ்நாட்டில் திமுகவின் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் மூலம் செயல்படுத்துவது என்கிற முதல்வர் ஸ்டாலினின் வியூகம், தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?











Click it and Unblock the Notifications