Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக விருப்பமனுவை பார்த்தீங்களா? 8 பக்க புக்லெட்! சிறைக்கு போயிருக்கீங்களானு கேள்வி! திமுக ட்ரோல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் விருப்பமனுவில் போராட்டம் செய்து சிறை சென்றுள்ளீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டதை திமுக, அதிமுகவினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறத் தொடங்கியது.

TVK

பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 234 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை இந்த மனுக்களை பெறலாம்.

முதல் நாளான இன்று பனையூர் கட்சி அலுவலகத்திற்கு ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் மற்ற குடியிருப்புவாசிகளின் வீட்டருக்கே அமர்ந்து கொண்டது, தடுப்புகளை போட்டு அந்த வீடுகளுக்கு செல்வோரை பிளாக் செய்வது, கூச்சல் குழப்பம், ஒரே கூட்டம் என இருந்ததால் கடுப்பான அப்பகுதிவாசிகள் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், "அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பணத்தை கொட்டி வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இங்கும் இவ்வளவு கூட்டம் கூடினால் எப்படி" என போராட்டம் நடத்தினர்.

விருப்பமனுக்களை பெறுவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. தொண்டர்களும் நிர்வாகிகளும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த குழுவிடம் வழங்கலாம். முதல் நாளான இன்று மாவட்டச் செயலாளர் விருப்பமனுக்களை வழங்கினர். இன்று ஒரே நாளில் விருப்பமனுக்கள் விற்றுத் தீர்ந்தன.

இந்த நிலையில் தவெகவின் விருப்பமனுக்கள் வைரலாகி வருகிறது. சுமார் 8 பக்கங்கள் கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளின் விருப்பமனுக்கள் ஓரிரு பக்கங்களை கொண்டிருக்கும் என்கிறார்கள்.

ஆனால் தவெகவின் விருப்ப மனுவில் என்னென்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். அதில் பெயர் உள்ளிட்ட சுய விவரங்கள், தாய்மொழி என்ன, பேசும் திறன் உள்ள மொழிகள் எவை (Languages speak), எந்த சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்கள், அந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எத்தனை, நீங்கள் எந்த தொகுதியில் வசித்து வருகிறீர்கள்.

உங்களுக்கு வாக்குரிமை எந்த தொகுதியில் இருக்கிறது. உங்களுக்கான வெற்றி வாய்ப்புகளை கூறுங்க, ஏற்கெனவே சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால் அது குறித்த தகவல்கள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா, தவெகவில் இணைவதற்கு முன்னர், வேறு கட்சியில் இருந்தீர்களா,

கட்சியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணி என்ன, கழக போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்கு சென்றுள்ளீர்களா, ஆம் எனில் அது பற்றிய தகவல்களை கொடுங்கள், சமூகவலைதள பக்கங்களின் முகவரிகள் என்ன என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இதில் பலரும் டிரோல் செய்யும் கேள்வி சிறை சென்றுள்ளீர்களா என்பதற்குத்தான். அதாவது இதுவரை எத்தனை போராட்டங்களை தவெக நடத்தியுள்ளது, அதில் போராடி அவர்கள் சிறை செல்ல என கேள்வி எழுப்புகிறார்கள்.

மடப்புரம் அஜித்குமார் மரணம் தொடர்பாக தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அது போல் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் கைப்பட எழுதிய கடித நகலை அனுமதியின்றி விநியோகம் செய்ததற்காக அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டிருந்தார். சிறிது நேரம் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மற்றபடி சிறைக்கு செல்லும் அளவுக்கு தவெக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்பது திமுக, அதிமுகவினரின் விமர்சனமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+