திமுக அரசை சீண்டும் வகையில் அறிக்கை... சத்தியமூர்த்திபவன் மீது கடுகடுக்கும் அறிவாலயம்..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள ஒரு அறிக்கை கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலை பற்றி அறிந்தும் மருத்துவர்கள் ஊதியக் கோரிக்கை விவகாரத்தில் கே.எஸ்.அழகிரி இப்படியொரு அறிக்கை வெளியிட்டதன் பின்னணியில் உள்நோக்கம் உள்ளதாக கருதுகிறது திமுக தலைமை.
ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் உள்ள சூழலில் கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கை நிலைமையை இன்னும் சூடாக்கியுள்ளது.

குறைந்த ஊதியம்
தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சில வரிகள் பின்வருமாறு, ''நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25 ஆவது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட, அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விடத் தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.''

அறிக்கை
''கடந்த 10 ஆண்டுகள் களத்தில் போராடிய மருத்துவர்களுக்குக் குரல் கொடுத்து வந்த முதலமைச்சர் அவர்களுக்கு மருத்துவர்களின் வலி நன்றாகவே தெரியும். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையான PB4 @12yrs ஐ முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.10 ஆண்டுகளாக மனப்புழுக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.''

ரூ.300 கோடி
அரசு மருத்துவர்கள் மீது திமுக அரசுக்கு அக்கறையில்லாததை போல கே.எஸ்.அழகிரியின் அறிக்கை அமைந்துள்ளதாக கருதுகிறார்கள் ஆட்சியாளர்கள். அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக 300 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக தேவைப்படுவதால், அதற்குரிய வருவாய் வழிமுறைகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதற்குள் அழகிரி இதில் அறிக்கைவிட்டு அரசியல் செய்வதற்கான அவசியம் என்ன வந்தது எனவும் கேள்விகள் எழுகின்றன.

ஆலோசனை
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக பீட்டல் அல்போன்ஸ் நியமிக்கப்பட்ட போது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் கே.எஸ்.அழகிரியிடம் ஸ்டாலின் இது குறித்து ஆலோசிக்கவில்லை. ஒருவேளை அதன் எதிரொலியாக தான் இப்படி ஒரு அறிவுரை அறிக்கையை சத்தியமூர்த்தி பவன் வெளியிட்டதோ என விவாதம் நடைபெற்று வருகிறது.
-
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications