ஆளுநரின் தேநீர் விருந்து.. திமுக சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள்! ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திமுக அறிவித்திருக்கிறது. அதே நேரம் அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிப்பார் என்றும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். இந்த ஆண்டும் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும்.

சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ்: புறக்கணிப்புகான காரணமாக காங்கிரஸ் கூறுகையில், “கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன” என்று கூறியுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து! திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில்.. அதிமுக பங்கேற்பதாக அறிவிப்பு
மேலும் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை, ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது, உள்ளிட்ட காரணங்களுக்காக விருந்தை புறக்கணிப்பாதகாக காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்: “தற்போது ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2019 ஜூன் மாதம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். இவரது அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், சட்ட மசோதாக்களும் உரிய முறையில் ஏற்கப்படாமல் மக்களாட்சி மாண்புக்கும், மரபுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தும் நெருக்கடியை உருவாக்கி வருகிறார். அறிவுத் துறையில் திறன் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளை சிதைக்கும் முறையில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தடை ஏற்படுத்தி வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசை நடத்தி வருகின்றார். ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊது குழலாக செயல்படுகின்றார்.
இந்த நிலையில் ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தை புறக்கணித்து, அவரது ஜனநாயக விரோத செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது” என்று கூறி புறக்கணித்துள்ளது.
சிபிஎம்:“கூட்டாட்சியை, அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடித்திருப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது” என்று கூறியுள்ளது.
இப்படியாக விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
ஆனால், இதில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்படி இருக்க இன்று காலை அதிமுக சார்பில் விருந்தில் பங்கேற்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக சார்பில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார். அதாவது, “சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் இன்று மாலை தெரிவிப்பார்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications