ஆளுநர் தேநீர் விருந்து! திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில்.. அதிமுக பங்கேற்பதாக அறிவிப்பு
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அதிமுக பங்கேற்பதாக கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். இந்த ஆண்டும் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும்.

சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.
காங்கிரஸ்: புறக்கணிப்புகான காரணமாக காங்கிரஸ் கூறுகையில், “கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழகத்தின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன” என்று கூறியுள்ளது.
மேலும் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை, ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது, உள்ளிட்ட காரணங்களுக்காக விருந்தை புறக்கணிப்பாதகாக காங்கிரஸ் கூறியுள்ளது. இப்படியாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக தோழமை கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், அதிமுக விருந்தில் பங்கேற்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications