Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞரின் கதாநாயகன்.. திமுக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு! அறிவாலயத்தில் கனிமொழி தலைமையில் மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை துவக்கி உள்ள திமுக மிகத் தீவிரமாக பணியாற்றிய வருகிறது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஹீரோவாக பார்க்கப்படும் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். 2026 தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் பெறுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், திமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ளது. கடந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு அதன் தேர்தல் அறிக்கை தான் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

mk stalin DMK Kanimozhi

திமுக தேர்தல் பணிகள்

2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் இலவச பேருந்து பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள் ஆகிய முக்கிய தரப்பினரை கவர்ந்ததால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

2026 தேர்தல்

இந்த நிலையில் சில பொருளாதார சூழல்கள் அரசியல் சூழல் காரணமாக சில திட்டங்களை நிறைவேற்றாவிட்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதனை நிறைவேற்ற திமுக தயாராகி வருகிறது. அதற்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 2021 தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை விட இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இதற்கான குழுவை கடந்த வாரம் அமைத்து அறிவிப்பு வெளியிட்டது திமுக தலைமை.

கனிமொழி தேர்தல் அறிக்கை குழு

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவி செழியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், டிகேஎஸ் இளங்கோவன், எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கை

இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பிரதிநிதிகள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், நகர் நல சங்கத்தின் நிர்வாகிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், வாகன ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள், என அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.

திமுக வாக்குறுதிகள்

குறிப்பாக மகளிர் உள்ளிட்டோரைக் கவரும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான் திமுக எம்பி கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவரான கனிமொழி தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல பல்வேறு தரப்பினரை இந்த குழு சந்திக்க இருக்கும் நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த குழு பிரிந்து சென்று பல்வேறு தரப்பினரை சந்திக்க இருக்கிறது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+