என்னது மணிரத்தினம் இடதுசாரியா? திராவிட மாடல் ஆதரவாளர்களுக்கு ஷாக் தந்த திமுக எம்.பி. திருச்சி சிவா!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் ஒரு இடதுசாரி குணம் கொண்டவர் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா புகழ்ந்திருப்பது திராவிடர் இயக்க ஆதரவாளர்களையும் திராவிட மாடல் ஆட்சி ஆதரவாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பதாக சமூக வலைதளப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முன்வைத்து மணிரத்னத்தை பாராட்டியிருந்தார் திருச்சி சிவா. இது தொடர்பான அவரது அறிக்கையில்.
படம் பாரத்து நெருக்கமான சிலரோடு பகிர்ந்து கொள்வதோடு நிறுத்தமால் இதை எழுத நேர்ந்ததற்கு பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் சில எதிர்மறை விமர்சனங்களை படிக்க நேர்நத்தால்தான். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்களுக்கா பஞ்சம்? எங்கள் கொள்கைகளுக்கு முரண்படும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை இந்தப் படத்தில் நான் இரசித்தேன். கலைப் படைப்பினில் தனி மனித விருப்பு வெறுப்புகளைக் கொண்டு பார்வையிடுவது ஏற்புடைய குணமல்ல என்பதை உணர்ந்தவன் நான். ஆனால் மணிரத்தினம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தப் படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுவதையும் பார்க்க நேர்ந்தது. காந்தியையும், அண்ணாவையுமே விமர்சித்த உலகம் இது. எனவே இதில் விசித்திரம் ஏதுமில்லை. சிலர் கைவிட்ட முயற்சியினை, பலர் முயல முன்வராத இந்தப் பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கு வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதை குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடும். அதையும் உணர்ந்தே இந்தப் பதிவு என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் ஏற்கனவே இருவர் திரைப்படம் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை வில்லனாக சித்தரித்து காட்டியிருப்பார். கருணாநிதி- எம்ஜிஆர் வாழ்க்கையை விவரிக்கும் அத்திரைப்படம் தமக்கு எதிரானது என தெரிந்தும் கூட கருணாநிதி கடந்து சென்றார். திமுகவினரும் அப்படித்தான் இருந்தார். தம்முடைய திரைப்படங்களில் திராவிடர் இயக்க எதிர்ப்பை மையமாக கொண்டவர் மணிரத்னம். தமிழர் நலன், திராவிடர் இயக்கம், இனவிடுதலை என்ற கோட்பாடுகளை வில்லத்தனமாக்குவதில் சிறந்தவர் மணிரத்னம். அவரை ஒரு இடதுசாரி என்றெல்லாம் கொண்டாடுவது அநாகரீகம் என்கின்றனர் திராவிடர் இயக்கத்தினர்.

மணிரத்தினம் இடதுசாரி குணம் கொண்டவர். - திருச்சி சிவா (திமுக கொபசெ) மணிரத்தினம் மைன்ட் வாய்ஸ் : இது நம்ம லிஸ்டுலயே இல்லையே என பதிவிட்டுள்ளார் திராவிடர் இயக்க ஆதரவாளர் Prabaharan Alagarsamy என்ற பதிவர்.

மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பது உங்களுக்கு இப்போது தான் தெரியுமா? டூ லேட்!
தனது இருவர்(1997) திரைப்படத்தில் தலைவர் கலைஞரை வில்லனாக (தமிழ்செல்வன்_பிரகாஷ்ராஜ்) காட்சிப்படுத்திய போதும் , பிறகு ஆயுத எழுத்து (2004) திரைப்படத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த செல்வநாயகம் (பாரதிராஜா) என்ற கதாபாத்திரத்தை வில்லனாக காட்டிய போதே தெரிந்து விட்டதே மணிரத்னத்தின் முற்போக்கு குணம்! அடுத்து ரோஜா, பம்பாய் , கடல் திரைப்படங்களில் அவரது மதச்சிறுபான்மையினர் மீதான கரிசனம் வெளிப்பட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா? அதைப்பற்றியும் பேசுங்கள்! என எழுதியுள்ளார் Kumarandas Kumarandas என்ற திராவிடர் இயக்க ஆதரவாளர்.
-
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications