நெருங்கும் ஜனாதிபதி தேர்தல்.. தயாராகும் “திமுக” - எம்எல்ஏக்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்த கட்சித் தலைமை, ஜூலை 17 ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிராக கவுன்சிலர்களை திரட்டிக்கொண்டு விழுப்புரம் ரிசார்டில் தங்க வைத்ததாக அய்யப்பன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கட்சியிலிருந்தே சஸ்பெண்ட் செய்யப்பட்டார் எம்.எல்.ஏ. அய்யப்பன். இந்த நிலையில்தான் கடந்த 2 ஆம் தேதி திமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து அய்யப்பன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக தகவல் வெளியாகின.

எம்.எல்.ஏ. அய்யப்பன் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்த நிலையில், தான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை என்றும் திமுகவில் இறக்கும் வரை இருப்பேன் எனவும் அய்யப்பன் தெரிவித்தார். இந்த நிலையில், 4 மாதகால ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்னர் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திமுக தலைமை ரத்துசெய்து மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அய்யப்பன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் திமுக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜூலை 17 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை












Click it and Unblock the Notifications